உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரோல் மாடலுக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்திய நடிகர் அஜித்

ரோல் மாடலுக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்திய நடிகர் அஜித்

தன்னுடைய ரோல்மாடலும், மறைந்த பிரபல கார் ரேஸ் வீரரான அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஜித் குமார் அஞ்சலி செலுத்தும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.. நடிகர் அஜித்குமார் சமீப காலமாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.இந்நிலையில் கார் ரேஸில் தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னா நினைவு சிலை முன் அஞ்சலி செலுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.அதில் கடந்த 1994-ம் ஆண்டு மே 1 அன்று நடைபெற்ற சான்மேரினோ கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியின் போது நடந்த விபத்தில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும், மூன்று முறை பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னா என்பவரின் சிலை இமோலா சர்க்யூட்டில் டம்பெரெல்லோ கார்னரில் உள்ளது. இங்கு சென்ற நடிகர் அஜித் சிலை முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். அவரது காலடியில் ஹெல்மெட்டை வைத்து, காலை முத்தமிட்டார். இதனை ரேஸ் டீம் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவேற்றியுள்ளார். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Annamalai
மே 21, 2025 06:39

கவனத்துடன் ஓட்ட வேண்டுகிறேன் .


சந்திரன்,போத்தனூர்
மே 21, 2025 14:32

இரண்டு துறைகளில் கால் வைத்த எவனும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இவன் ஒழுங்காக நடிப்பை கவனிக்க வேண்டும் அல்லது நடிப்பை தலை முழுகிவிட்டு கார் ரேஸில் ஈடுபட வேண்டும்


மீனவ நண்பன்
மே 21, 2025 02:53

சிலை அன்னபூரணி அரசு சாயலில் இருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை