பெய்ரூட்: லெபனானில் பேஜர்கள் வெடித்துச் சிதறிய நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்., 7ல் துவங்கியது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jxs7z9z5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பேஜர் வெடிப்பு!
ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், லெபனானில் 3,000க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம், நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் பேஜர் வெடித்ததில், 12 பேர் பலியாகினர்; 2,750 பேர் காயமடைந்தனர். இவர்களில், 200 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.வாக்கி-டாக்கி 'அட்டாக்'
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் வெடித்ததில் நேற்று 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். லெபனான் பார்லிமென்ட் உறுப்பினர் அலி மகன் மஹ்தியின் இறுதி ஊர்வலத்தின் போது வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியுள்ளது. பேஜர்கள் வாங்கிய அதே நேரத்தில், வாக்கி-டாக்கிகளும் ஹிஸ்புல்லாவால் வாங்கப்பட்டன. பேஜர்களில் வெடிகுண்டு வைத்தபோதே, வாக்கி டாக்கியிலும் இஸ்ரேல் உளவுப்படை வெடிகுண்டுகளை வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.