உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெட்டுக்கிளி வறுவல், புழு புலாவ்! நாக்குச் சொட்ட சாப்பிடலாம்: இங்கல்ல சிங்கப்பூர் அரசு அனுமதி

வெட்டுக்கிளி வறுவல், புழு புலாவ்! நாக்குச் சொட்ட சாப்பிடலாம்: இங்கல்ல சிங்கப்பூர் அரசு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: பட்டுப்புழு, வெட்டுக்கிளிகள், உணவு புழுக்கள், என 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி உள்ளது.இது தொடர்பாக சிங்கப்பூர் உணவுத்துறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், பூச்சிகள் மற்றும் பூச்சி இனங்களை இறக்குமதி செய்து கொள்ள உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் நுகர்வுக்கு மற்றும் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம் . அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பூச்சிகள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். காடுகளில் வாழும் பூச்சிகளை உணவாக பயன்படுத்தக்கூடாது. பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிகளை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.இதனையடுத்து அந்நாட்டு உணவகங்கள், வாடிக்கையாளர்களை கவர பூச்சிகளை கொண்ட உணவுகளை தயாரிக்க தயாராகிவிட்டன. இதற்காக சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை இறக்குமதி செய்ய உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Pandi Muni
ஜூலை 10, 2024 08:26

நல்ல முயற்சி.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 22:02

கம்போடியா, வியட்னாம், லாஓஸ் போன்ற பல நாடுகளில் புழு, பூச்சி உணவு பிரபலம். தைவானில் மூங்கில் புழுக்கள் அதிக பிரபலம்.


ராமபத்ரன்
ஜூலை 09, 2024 21:58

இங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம்.


samosanets 2023
ஜூலை 09, 2024 18:44

வெட்டுக்கிளி என்ன நம்மூரிலும் சிக்கன் பிரியாணியிலும் கரப்பான், பல்லி கிடைக்கிறதே


Marimuthu Kaliyamoorthy
ஜூலை 09, 2024 19:11

INVITING STRONG CORONA. SINGAPORE WILL PERISH FIRST.


Velan
ஜூலை 09, 2024 18:34

மனிதன் மட்டும்தான் பாக்கி.. கொரானா எலி காய்சல் .


Vijay s
ஜூலை 09, 2024 18:08

வாவ் லூக் டேஸ்ட்டி


Ramesh Sargam
ஜூலை 09, 2024 17:59

விவசாயிகள் வாழ்க்கையில் / வயிற்றில் அடிக்கும் வேலை


அல்லாவு அக்பர்
ஜூலை 09, 2024 22:44

எல்லா விவசாயிகளும் வெட்டுக்கிளி, புழு ஆகியவற்றை உற்பத்தி செய்யலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை