உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டன் வீதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: இந்திய வம்சாவளியினர் கொண்டாட்டம்

லண்டன் வீதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: இந்திய வம்சாவளியினர் கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் இந்திய வம்சாவளியினர் ஏராளமான பேர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம், பல்வேறு நாட்டினரையும் ஆச்சர்யப்படுத்தியது.விநாயகர் சதுர்த்தி விழா, உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இந்த விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசர்ஜன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆட்டம், பாட்டம் என பக்தி மற்றும் கொண்டாட்ட மனதுடன் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர்.பின்னர் லண்டன் நகர வீதிகளில் பக்தி மணம் கமழ, மேள, தாளங்கள் முழங்க குழுவாக சென்றனர். அங்குள்ள நீர்நிலை ஒன்றில் விநாயகர் சிலையை பக்தி முழக்கங்களுடன் விசர்ஜனம் செய்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வை அதில் பங்கேற்ற ஒருவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நுாற்றுக்கணக்கான பேர் பங்கேற்ற இந்த ஊர்வலம் மற்றும் விசர்ஜனம், லண்டனில் வசிக்கும் பிற நாட்டினரை ஆச்சர்யப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

உ.பி
செப் 07, 2025 18:18

சனாதனமே இங்கிலீஷ் தானை காப்பாற்றும்


Rathna
செப் 07, 2025 18:14

பாக்கிஸ்தான் மூரக்ஸ் போல நாம் அங்கே போய் பிரச்சனை செய்யாமல், நமது கலாச்சாரத்தை தூக்கி பிடிப்பது பாராட்டுக்குரியது.


sankaranarayanan
செப் 07, 2025 17:30

லண்டனில் இந்திய வம்சாவளியினர் ஏராளமான பேர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம், பல்வேறு நாட்டினரையும் ஆச்சர்யப்படுத்தியது. லண்டன் சென்றுள்ள திராவிட மாடல் அரசின் முதல்வர் இதில் பங்கு கொள்ளவில்லையே ஏனிப்படி அவரை அக்கூட்டத்தில் காணோமே திராவிட அரசின் சார்பாக பங்கு கொள்ள வேண்டாமா


V Venkatachalam
செப் 07, 2025 16:07

வரும் வருஷங்களில் இது மேலும் மேலும் வளரட்டும்.


அப்பாவி
செப் 07, 2025 15:50

போன எடத்தை சுத்தமா இருக்க உடுவமா? ஏற்கனவே பான்பீடா போட்டு துப்புறாங்க.


Jagannathan Narayanan
செப் 08, 2025 07:29

ஓவரா முட்டு கொடுக்கவேண்டாம்


முதல் தமிழன்
செப் 07, 2025 15:37

போனோமா வேலை செஞ்சோமான்னு இருக்கணும்.


Svs Yaadum oore
செப் 07, 2025 13:11

லண்டன் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்கு விடியலை சிறப்பு விருந்தினராக அழைத்தார்களாம் ....ஆக்ஸ்போர்ட் பல்கலையில் தினசரி வாடகை முப்பதாயிரம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விடியல் சென்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் விரைவில் வெளியிடப்படுமாம் ....


M Ramachandran
செப் 07, 2025 11:57

லண்டன் விசிட் விடியளுக்கு துருகா ஸ் டாலின் இந்த செய்தியை படித்து காட்ட வேண்டும்.அங்கு பெரியாருக்கு ரூம் அரசு செலவில் ஒதுக்கியும் திராவிடமும் விடியலும் ஒன்றும் ஆட்ட முடியல போலிருக்கு. அது சரி போன பலான விஷயம் முடிந்தா சரி னுட்டு வந்துட்டார் போல.


முக்கிய வீடியோ