உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்

மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: மும்பை வந்த விமானம், தொழில்நுட்ப காரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் 15 மணி நேரமாக அங்கு பரிதவித்து வருகின்றனர்.லண்டனில் இருந்து மும்பைக்கு பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 200க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளுடன் நேற்று( ஏப்.,02) மும்பைக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அவசர மருத்துவ தேவை காரணமாக துருக்கியின் தியார்பகீர் நகரில் தரையிறக்கப்பட்டது. ஆனால், மீண்டும் எப்போது கிளம்பும் என தெரியாமல் பயணிகள் விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்.இது தொடர்பாக பயணிகள் சிலர் தங்களது குறைகளை பதிவிட துவங்கினர்.'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' கர்ப்பிணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதியின்றி பரிதவித்து வருவதாகவும், உடனடியாக உதவ வேண்டும்' என கூறியிருந்தார்.உடனடியாக துருக்கிக்கான இந்தியத்தூதரகம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விமான நிலைய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. பயணிகள் நலனுக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்' எனத் தெரிவித்து உள்ளது.விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். தொழில்நட்ப ஆய்வை எங்கள் பொறியாளர்கள் மேற்கொண்டு உள்ளனர். விரைவாக , எங்களின் பயணிகள் மும்பைக்கு அழைத்துச் செல்வோம். பணி முடிந்ததும் உரிய தகவல் கூறப்படும் எனக்கூறியுள்ளது.மருத்துவ காரணங்களுக்காக அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்படுவது வழக்கம் என்றாலும், ஒரே நேரத்தில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக தரையிறக்கப்படுவது அசாதாரணமானது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஏப் 04, 2025 03:54

இவ்வளவு நாளும் எர்டோகன் தண்ணிக்கு கூட துப்பில்லாமல் இருந்தார் என்பது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை வெறுப்பில் செய்திருக்கலாம். குடிநீர் போன்ற அடிப்படை வசதி கூடவா இருக்காது?