உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

பெஷாவர்: பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்த சுற்றுலா பயணி கைதான நிலையில், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக் கொன்றதுடன், பொதுவெளியில் அவரை துாக்கிலிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சுற்றுலா

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் நகருக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றார். அங்கு அவர், முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முகமது இஸ்மாயிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே, அங்குள்ள மசூதியில், ஒலிபெருக்கி வாயிலாக இச்சம்பவம் குறித்து நடந்த விபரம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு முழக்கமிட்டனர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்கள் போலீஸ் நிலையத்தை சூறையாடியதுடன், போலீஸ் வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இதனால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என கருதி, போலீசார் ஓட்டம் பிடித்தனர்.

பதற்றம்

அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை வெளியே இழுத்துச் சென்று பொதுவெளியில் துாக்கிலிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R S BALA
ஜூன் 22, 2024 13:36

இங்கிருக்கும் நடுநிலைகள்..


KR
ஜூன் 22, 2024 12:04

In our state, openly a minister ridiculed the majority religion and nothing happens. His party even wins all the seats they contested in Lok Sabha polls. Don't know what happened to the various cases that were registered. All eye wash. What a contrast with our neighbouring country


Rajah
ஜூன் 22, 2024 11:51

இங்கும் அப்படித்தானே நடக்கின்றது. எவனாவது ஒருவன் இஸ்லாம் மதம் பற்றி குறை சொல்வானா? அப்படிச் சொன்னால் தவறாகப் பேசியவர்களை அரசின் துணையோடு கொன்று விடுவார்கள்.


Kumar Kumzi
ஜூன் 22, 2024 10:15

இம்மண்ணில் வாழ தகுதியற்றவர்கள்


Barakat Ali
ஜூன் 22, 2024 10:07

குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை ........ இந்தியாவில் மதத்தை அவமதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை அவசியம்


பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 09:46

அந்த நபர் தவறு செய்தாராகவே இருக்கட்டும்..... சட்டப்படி தானே தண்டனை வழங்க வேண்டும்....... ஆனால் நாங்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.


சதீஷ்குமார்
ஜூன் 22, 2024 09:46

இது காட்டுமிராண்டி தனம் என்று பேசவில்லை


Lesly Loyans
ஜூன் 22, 2024 09:27

cancer of society


சந்திரசேகர்
ஜூன் 22, 2024 09:24

யானைக்கு மதம் பிடித்தால் காடு நாசம். மனிதனுக்கு மதம் பிடித்தால் நாடு நாசம்.


A
ஜூன் 22, 2024 09:14

can go there if they feel not safe in India????


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை