வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ரஷ்யாவிடம் இருந்து சீனா கச்சா எண்ணெய் வாங்கினார் தவறில்லை யா பாரதம் வாங்கினார் தவறா என்ன ஒரு திரை கதை வசன நாடகம் பாரத மக்களே திருந்துங்கள் அமெரிக்காவின் பித்தலாட்டம் புரிகிறதா சீனாவிடமிருந்து கொள்முதல் அதிகம் அதுவும் ராணுவ உற்பத்திக்கு தேவையானவை அதான் இப்படி ஒரு நாடகம் பாரதம் னா இழிஞ்சவாய்களா காலம் வரும்
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை தனிமைப்படுத்த வேண்டும் ஒவ்வொரு தேவைகளுக்கும் அடுத்த நாட்டை நம்பி இருக்குமாறு அமெரிக்காவை கொண்டு வந்தால் தான் அடங்குவார்கள்.
மார்க் ரூபியோ இன்னொரு கோமாளி கோமாளி அரசன் ஆட்சியில் கோமாளித்தனம் செய்தாதான் காலம் தள்ள முடியும், சீன இந்தியாவை விட அதிகமான குரூட் ஆயில் வாங்குகிறது, அவர்களுக்கு வரி இல்லையாம், இந்தியா மட்டும் வரி கட்டணுமாம், பிரதமர் என்ன செய்தார், ட்ரம்ப் என் நண்பர் என்கிறார், அவர் ஆப்பு அடிக்கிறார், இது நம் நாட்டு மக்கள் அனைவரின் மீது விழுந்த ஆடி, இனி எல்லா விலை வாசியும் விண்ணை தொடும், இங்கே தனியாக ஆவர்த்தனம் செய்யும் பிரதமர் அங்கு போயி பேசி குறைக்கலாம், செய்வாரா? அவருக்கு ஊர் சுற்றுவதில்தான் குறி நாடாவது காடாவது.ஏதாவது செய்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார், மக்களை பற்றி கவலையாவது மன்னாவது ?
இந்த விதமான வரி பயித்தியத்தை குணப்படுத்த முடியுமா? கஷ்டம்தான்.
அமெரிக்காவின் பாகுபாடு! சீனாவிற்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம்! என்ன வெள்ளையன்களிடம் (ஐரோப்பாவிடம்) காட்டும் பரிவு இந்தியர்களிடம் இல்லை. முக்கிய அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களை நம்பித்தான் உள்ளது என அவர் மறந்து விடக்கூடாது!
மோடிஜி இருக்க நமக்கு பயமேன்?
ட்ரம்ப் ஒரு பயித்தியம். அதற்க்கு ஒத்து ஊதும் ஐரோப்பிய கூட்டும் பொரியலும் காரிய கார பயித்தியங்கள்
அடி வாங்கி உங்களிடம் வந்து ஊளையிட்டவன் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அடி எப்படி இருந்தது என்று. அதே பாணியில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஊமை குத்து நிச்சயம் விழும். எங்கள் பொருளை வாங்க வேறு நாடுகள் உள்ளன. நீங்கள் அநியாய வரி விதித்து உள்ள பொருட்கள் உங்கள் நாட்டில் மட்டும் பயன்படும் பொருட்கள் அல்ல. ஏற்றுமதி செய்யபடாதவற்றை உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தி கொள்ளும் பொருளாதார சக்தி எங்கள் நாட்டிற்கு உண்டு. அதே சமயம் உங்களிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பொருட்களை இறக்குமதி செய்வதை ஒத்திவைப்பு செய்து நிச்சயம் பதிலடி கொடுக்க முடியும்.
ரஷ்யாவிடம் இருந்து சீனா எண்ணெய் வாங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுக்கலாம். அப்ப ரஷ்யாவுக்கு சீனாவோட காசு போகாது ஆயுதமா மாறாது.இந்தியா வாங்கினால் மட்டும் ரஷ்யாவுக்கு காசு போகும் ஆயுதமா மாறும் என்னங்கடா உங்க நியாயம்? ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் டிரம்பரே உங்களோட அடாவடித் தனத்தால் இந்தியாவில் இன்று பிறக்கும் குழந்தைகள் கூட அமெரிக்க எதிர்ப்பு மன நிலையில்தான் பிறக்கும். வளரும்.
இவர்கள் பதில் இப்படி இருக்கின்றது. நீ ஏன் அவனை கத்தியால் கொன்றாய். நான் அவனை கொல்லவில்லை, வெறும் கத்தியை அவன் மார்பில் குத்தினேன் அந்த கத்தி தான் அவனை கொன்றது.