உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா புதிய பிரதமர் ஆகிறார் மார்க் கார்னி; இவர் யார் தெரியுமா?

கனடா புதிய பிரதமர் ஆகிறார் மார்க் கார்னி; இவர் யார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் புதிய பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவராக தேர்வாகி உள்ள மார்க் கார்னி கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார். கனடாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை பிரதமராக மார்க் கார்னி நீடிப்பார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.

யார் இந்த மார்க் கார்னி ?

* மார்க் கார்னி கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார். இவருக்கு வயது (59).* 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8வது கவர்னராக மார்க் கார்னி பணியாற்றி உள்ளார்.* லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். இது குறித்து மார்க் கார்னி கூறியதாவது: அமெரிக்கா, கனடா அல்ல. கனடா ஒருபோதும், ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது. அமெரிக்கா நம் இயற்கை வளங்களையும், குடிநீரையும், நிலத்தையும், கூடவே முழு கனடா நாட்டையும் அடக்கி ஆள விரும்புகிறது. இது அவர்களுடைய நடவடிக்கையை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடாவின் தொழிலாளர்களையும், குடும்பங்களையும், வணிகங்களையும் பாதிக்க வைக்கும் விஷயங்களை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rahulakumar Subramaniam
மார் 11, 2025 03:57

ஜஸ்டின் அவர்களை ஒருமையில் பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?


Davamani Arumuga Gounder
மார் 11, 2025 21:00

ஆம்.. ஆம்.. அந்த நண்பர் நாற்காலியை தூக்கிக்கொண்டு ஓடும் திறமையும், தகுதியும் இல்லாதவர்தான்.. ஆனால் நம் தமிழகத்தில் கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். படங்களில் ஜஸ்டின் வருவாரே


Mecca Shivan
மார் 10, 2025 18:43

கட்சியே சரியில்லை என்கிறபோது புதிய பிரதமர் ஒன்றும் மாற்றத்தை கொண்டுவரமாட்டார் .. கட்சி தலைவர் காலிஸ்தானி ஆதரவாளர் என்பது தெரியாது ..மேலும் இதற்க்கு முன் இருந்த தலைவரும் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த கட்சியில் அடிப்படை வெள்ளையின தலைவர்களுக்கு இடம் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது


kulandai kannan
மார் 10, 2025 14:54

ஒழிந்தான் ட்ரூடோ


தஞ்சை மன்னர்
மார் 10, 2025 13:16

அப்போ நம்மளுக்கு நாடு என்று ஒன்று கிடையாதே


Ahmed
மார் 10, 2025 10:07

யார் இந்த... சிம்பிள் பதில்....Trump இன் அடிமை....


Kumar Kumzi
மார் 10, 2025 11:47

Banglades கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேல


Oru Indiyan
மார் 10, 2025 09:49

சூப்பர். அருமையான போட்டி. டிரம்ப் ஒரு துக்ளக் ஆக போகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை