உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் பிரிவினைவாத தலைவருடன் சந்திப்பு: கிளம்பியது புது சர்ச்சை!

வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் பிரிவினைவாத தலைவருடன் சந்திப்பு: கிளம்பியது புது சர்ச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், முஸ்லிம் மத பிரிவினைவாதி தலைவர் மமுனுல் ஹக்-ஐ சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

சந்திப்பு

சமீபத்தில், அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வங்க பவனில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். இந்நிலையில், டாக்காவில் முகமது யூனுஸ், முஸ்லிம் மத பிரிவினைவாதி தலைவர் மமுனுல் ஹக் மற்றும் அவரது குழு உறுப்பினர்களை சந்தித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

யார் இந்த மமுனுல் ஹக்?

ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மமுனுல் ஹக், வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது ஷேக் ஹசீனா நாட்டை விட்டு, வெளியேறியதும் இடைக்கால அரசு, மமுனுல் ஹக் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பு தலைவர்களை விடுவித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையையும் இடைக்கால அரசு நீக்கியது. தற்போது வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த சூழலில், பிரிவினைவாதி உடன் முகமது யூனுஸ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mohan
செப் 03, 2024 18:43

இந்த நபருக்கு எப்படி நோபல் பரிசு கிடைத்தது ? பயங்கர வாதிகளிடம் நேரடியா பேசும் இவர் நல்லவராக இருக்க வாய்ப்புக்கள் மிக குறைவு. இந்த நன்றி கெட்டவர்களின் நாட்டின் சுதந்திரத்திற்க்காக நமது இந்திய ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் உயிர் தியாகம் செய்தனர். ""அமைதி"" மார்க்கத்தினர் வாழ்க


M Ramachandran
செப் 03, 2024 13:23

படித்த நல்லது தெரியாத மத வெரியன். இவன் அழிவது உறுதி. இவன் ஒரு பொம்மமை. கீ கொடுப்பது அமெரிக்கன்


M Ramachandran
செப் 03, 2024 13:21

அடுத்த பாகிஸ்தான் ஆக போலாகிறது. சீனா முகைய்ய நுழைத்தலேயா விபரீதம் யேற்படும் னேஅப்பளத்தில் நுழைத்து கம்யூனிடுகளாக அரசியலிய்ய மாற்றி இப்போர் நெஆபால்மா திணறி வருது. சீன பேயயை தலையில் ஆணி அடித்து உக்கார வைக்க வேண்டும். இவனுக்கெல்லாம் மனித நேயம் காட்ட கூடாது.


Naga Subramanian
செப் 03, 2024 12:51

ஒரு நோபல் பரிசு பெற்ற தீவிரவாதியை இப்பொழுதுதான் காண்கிறேன்.


kulandai kannan
செப் 03, 2024 14:34

ஆமார்த்திய சென் இவனுக்கு வழிகாட்டி


அப்பாவு
செப் 03, 2024 12:49

பங்களதேஷை பாகிஸ்தானிட சேத்துருங்க. சேந்து பிச்சையெடுக்கலாம். இந்த யூனுஸ் தானே விலகிடுவாரு. இல்லே போட்டுத் தளிளிருவாங்க. எப்பிடி வசதீன்னு தெரியலை.


Sivagiri
செப் 03, 2024 12:42

இதே போல இங்கேயும் , மேற்கு வங்காளத்தில் , ஒரு நோபல் கொடுத்து , மோடிக்கு எதிராக ஒரு புள்ளியை உருவாக்கினார்கள் , அந்த புள்ளியில் இருந்து ரோடு போட்டுடலாம்னு , பிளான் போட்டார்கள் , , அதே போல இங்கே ரிசர்வ் வங்கி , கவர்னரை அமெரிக்காவுக்கு கொண்டு போயி அங்கே இருந்து புள்ளி கோலம் போட பிளான் போட்டார்கள், இப்டி பல புள்ளிகளை இங்கே மோடிக்கு எதிராக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் , ஆனால் எல்லா புள்ளிகளும் காணாமல் போயி விட்டன . . . ஆனால் இங்கே திருட்டு மாடல் , அந்த புள்ளிகளை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது . . . அமேரிக்கா - பங்களாதேஷ் - வேஸ்ட் பெங்கால் - சென்னை - இந்த சதுரங்க லிங்க்-ஐ - மத்திய உளவு துறை கவனிக்க வேண்டி உள்ளது . . .


sankaranarayanan
செப் 03, 2024 12:33

இனம் இனத்தோடுதான் சேரும் என்பது யூனுஸ் நிரூபித்துவிட்டார் இவருக்கு இன்னொரு நோபல் பரிசு வழங்கலாம்


Ramesh Sargam
செப் 03, 2024 12:30

ஒருவேளை பிரிவினைவாத தலைவர்களை யூனுஸ் சந்திக்க மறுத்தால், யூனுஸுக்கும், ஷேய்க் ஹசீனா நிலைதான். அந்த பயத்தில் கூட அந்த பிரிவினைவாத தலைவர்களை யூனுஸ் சந்தித்திருக்கலாம்.


Nandakumar Naidu.
செப் 03, 2024 12:23

இந்தாளுக்கு நோபல் பரிசு ஒரு கேடா.


R.MURALIKRISHNAN
செப் 03, 2024 11:59

தீவிரவாதிகள் இணைகின்றனர்.