உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு( ஏ.ஐ.,) துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைம்ஸ் இதழ் 100க்கும் மேற்பட்டோரை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , இந்திய அமெரிக்கர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக அந்த இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏ.ஐ.,க்காக இந்தியா இதுவரை சட்டம் இயற்றவில்லை. ஆனால் இந்த துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது.ஏஐ துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. இதற்காக அஸ்வினி வைஷ்ணவ் கடுமையாக உழைக்கிறார். நவீன ஏஐ அமைப்புகளுக்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தியில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக, இந்தியா வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் போதுமான அளவு தனியார் ஆராய்ச்சி மற்றும் முதலீடு இல்லை. நவீன உற்பத்தி சூழலும் இல்லை. அதிநவீன ஏஐ மற்றும் செமி கண்டக்டர் மேம்பாட்டிற்கு தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்கு தேவையான கல்வி கட்டமைப்பும் இல்லை. ஏ. ஐ., தொழில்நுட்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் இந்திய அமெரிக்கர்கள் பலர் இருப்பதாக பிரபல டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களை குறிப்பிட்டு 'TIME100 Most Influential People in AI 2024' பட்டியலில், கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, சத்திய நாதெல்லா மற்றும் பலர் போன்ற முக்கியமான இந்திய-அமெரிக்கர்கள் உள்ளனர்.இந்த வருடம், பல இந்திய-அமெரிக்க தலைவர்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர், அவர்கள் துறைக்கு முக்கியமான பங்களிப்புகளை செய்கின்றனர். குறிப்பிட்ட நபர்களில் கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் நுண்ணறிவு CEO சுந்தர் பிச்சை; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னணி CEO சத்திய நாதெல்லா; அமேசானின் செயற்கை பொதுவான நுண்ணறிவின் SVP மற்றும் தலைமை விஞ்ஞானி ரோகித் பிரசாத் ஆகியோர் உள்ளனர், மேலும் பலர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
செப் 06, 2024 20:22

இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னேறலாம் ...... இந்தியா முன்னேற வாய்ப்பில்லை ..... திறமையான பொறியாளர்களை உருவாக்க இந்தியாவால் இயலாது ......


munna
செப் 06, 2024 16:32

Artificial intelligence Machine Learning/Data Science பாடத்திட்டம் வந்துவிட்டது. அந்தக் கல்வி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. வருங்காலங்களில் நிறைய கண்டுபிடிப்புகள் நிகழும். உதாரணமாக மால் போன்ற இடங்களில் கண் பார்வை இல்லாதவர் களுக்கு வழி காட்டும். நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும். இன்னும் பல உள்ளது. நிச்சயமாக இந்தியா ஏ .ஐ துறையில் கோலோச்சும்.


munna
செப் 06, 2024 16:26

இந்தியாவும் வெகு விரைவில் முன்னேறும் . என் மகள் மற்றும் நான்கு பேர் இநைந்து ரோபாட் இயந்திரம் செய்து உள்ளார்கள் . வரும் 12 ஆம் தேதி காட்சி படுத்தப்போகிறாள். இன்னும் எவ்வளவோ செய்ய போகிறாள் . இந்தியாவும் முன்னோடியாக திகழும்.


xyzabc
செப் 06, 2024 13:26

திராவிட கல்வியின் விளைவு.


N Sasikumar Yadhav
செப் 06, 2024 16:58

டாஸ்மாக் சாராயக்கடை வாசலில் நிற்க வைக்கிறது திராவிட சமச்சீர் கல்வி


Barakat Ali
செப் 06, 2024 20:23

நல்லவேளை ....... இந்தியா முழுவதும் திராவிடக்கல்வி / சமச்சீர் கல்வி இல்லை ..... மற்ற மாநிலங்களாவது முன்னேறட்டும் .....


N.Purushothaman
செப் 06, 2024 13:01

அஷ்வினி வைஷ்ணவ் காலஞ்சென்ற மனோகர் பாரிக்கர் போல மெத்த படித்தவர் .....சிறந்த அறிவாளி ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை