உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி இத்தாலி வருகை : காந்தி சிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

மோடி இத்தாலி வருகை : காந்தி சிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மிலன்: இத்தாலியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க வர உள்ள நிலையில் அங்கு தேசத்தந்தை காந்தி சிலை காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலி செல்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் இத்தாலியில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். சிலை பீடத்தில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. முன்னதாக கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதை கண்டித்து காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக கூறப்படுகிறது.பிரதமர் மோடி இத்தாலி வருகை தரும் நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramaswamy
ஜூன் 13, 2024 01:22

இந்தியா தனது இரும்பு கரத்தை உபயோஹிக்க வேண்டும். அப்போ தான் தீவிர வாதம் ஒடுங்கும், அது காஷ்மீரிலும் சரி, வெளி நாட்டிலும் சரி.


vaiko
ஜூன் 12, 2024 22:47

மோடி சொன்னபடியெல்லாம் கேட்டு குட்டி கரணம் போட அவர்கள் என்ன தேர்தல் ஆணையத்திலா வேலை பார்க்கின்றனர்.


Suresh sridharan
ஜூன் 12, 2024 22:02

இத்தனை பெரிய விலை கொடுத்து அந்த சவப்பெட்டி இந்த பிரிவினை வாதிகளுக்கு வாங்க வேண்டுமா? மிக இவர்கள் அடங்கப் போவதில்லை . விரைவில் அடக்கப்பட வேண்டும்


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூன் 12, 2024 21:29

இன்னும் இரண்டு வாரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்...என்று செய்திவரப்போகிறது


Ramesh Sargam
ஜூன் 12, 2024 21:02

இன்று மொத்த உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். இப்பொழுது அவர்கள் ஓரளவுக்கு அடக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அதிகம் ஆகிவிட்டார்கள். அவர்கள் வசிக்கும் அந்த சம்பந்தப்பட்ட நாட்டு அதிபர்கள் அவர்களை ஒழிக்க முயலவேண்டும்.


rama adhavan
ஜூன் 12, 2024 20:37

தனி மனிதன் சிலை கலாச்சாரம் குறைக்கப்பட வேண்டும். ஆண்டவனை தவிர ஏனையோர் மீதான மதிப்பும் மரியாதையும் பாசமும் நாள்பட நாள்பட குறையும், மறையும். நீங்களே சிந்தியுங்கள்.


sankaranarayanan
ஜூன் 12, 2024 20:21

இத்தாலிக்கு இத்தாலி அம்மையார் செல்லவில்லையா? அவர்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அவர்கள்தானே செல்ல வேண்டும்


RajK
ஜூன் 12, 2024 20:20

நமது நாட்டை பிரித்து சிதற வைக்கும் நோக்கத்தில் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். அப்படிபட்ட சக்திகளிடம் உதவி பெற்று நடக்கும் மாநில கட்சிகள் உள்ளனர், தமிழ்நாட்டில் கூட‌ இருக்கலாம். திமுகாவும் அவ்வப்போது பிரிவினைவாதம் பேசும் கட்சிதான்.


ArGu
ஜூன் 12, 2024 20:12

ஏன்? நேரு சிலை எல்லாம் எங்கும் இல்லையா?


M Ramachandran
ஜூன் 12, 2024 20:09

இந்த காந்தி சிலையை இத்தாலி நாட்டில் சேத படுத்திய தீவிர வாதிகள் பற்றி நம் இத்தாலி மாமியின் எண்ண ஓட்டம் என்ன?


மேலும் செய்திகள்