உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச இந்து தலைவர்களுடன் முகமது யூனுஷ் சந்திப்பு

வங்கதேச இந்து தலைவர்களுடன் முகமது யூனுஷ் சந்திப்பு

டாக்கா: மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என வங்கதேச இந்து தலைவர்களை சந்தித்து அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் உறுதி அளித்தார்.வங்கதேசத்தில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் 15 பேர் உறுப்பினர்களாக கொண்ட இடைக்கால அரசு பொறுப்பேற்றது..முன்னதாக வங்கதேசத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் அவர்களின் வழிபாட்டு தலங்கள், கோயில்கள் தாக்கப்பட்டன. இந்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இச்செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இன்று டாக்காவில் பிரசித்தி பெற்ற தாகேஷ்வரர் கோயிலுக்கு வருகை தந்த முகமது யூனுஷ், இந்து அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் கூறியது, இங்கு நாம் அனைவரும் ஒரே மக்கள். நமக்குள் எந்த பாகுபாடு காட்ட வேண்டாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல், மதப்பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
ஆக 13, 2024 22:11

இஞ்சார்யா சாத்தான் வேதம் ஒதுது. மோடி பங்களாதேஷில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உசுப்பிவிடப்பட்ட ரவுடித்தனத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மோடி அரசு இந்தியா வரவிரும்பும் ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கவேண்டும். சட்டவிரோத குடியேறிகளை வேலை வழங்கினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபடுவார்கள் என்று அறிவிக்க வேண்டும். இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கும் பங்களாதேஷிகளை கைது செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க இந்தியா முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கைது செய்யப்படுபவர்களை உடனடியாக பங்களாதேஷுக்கு துரத்தியடிக்க வேண்டும். மீண்டும் எல்லை தாண்டி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தால் சுட்டுத்தள்ளுவோம் என்று அறிவிக்க வேண்டும். இந்திய சாலை, கடல், வான் எல்லையை உபயோகிக்க பங்களாதேஷுக்கு பத்து ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி, வணிகம் பத்து ஆண்டுகளுக்கு தடை. பத்தே அத்து ஆண்டுகள் போதும். பிச்சைக்கார நாடாகி அவனுனக்ளுக்குள்ளே அடிச்சிக்கிட்டு செத்து தொலைவானுங்க. மோடிதான் செய்ய வேண்டும்.


subramanian
ஆக 13, 2024 21:22

இந்த வன்முறையை தூண்டிய சைனா , பாகிஸ்தான் அதற்கான விலையை கொடுக்கும்.


subramanian
ஆக 13, 2024 21:19

எல்லாவற்றையும் நடத்தி முடித்து விட்டீர்களா என்று உறுதி செய்து பின்னர், நன்றாக நாடகம் ஆடுகிறார்கள். இந்துக்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் காத்திருந்து குற்றவாளிகளை அழிக்கும்.


Ramesh Sargam
ஆக 13, 2024 21:12

அணைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். குறிப்பாக ஹிந்துக்கள் மீது இனி எந்த தாக்குதலும் கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை