உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூல்: திரும்பக்கேட்கிறார் விஜய் மல்லையா!

இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூல்: திரும்பக்கேட்கிறார் விஜய் மல்லையா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: '' அமலாக்கத் துறையும், வங்கிகளும், என்னிடமிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்ததை நியாயப்படுத்த தவறினால், நான் சட்டபூர்வமாக நிவாரணம் தேட முயற்சிப்பேன்,'' என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.பல வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். அவரை பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து உள்ளது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பார்லிமென்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது,'' எனக்கூறி இருந்தார்.இது தொடர்பாக விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடன் வசூல் தீர்ப்பாயம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன், வட்டியுடன் சேர்த்து 6,203 கோடி ரூபாய் என்று உத்தரவிட்டது. இன்று பார்லிமென்டில் பேசிய நிதி அமைச்சர், விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்றதன் மூலம் அமலாக்கத்துறை 14,131 கோடி ரூபாய் வசூலித்து வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். அப்படி இருந்தும் நான் இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி! அமலாக்கத் துறையும், வங்கிகளும், என்னிடமிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்ததை நியாயப்படுத்த தவறினால், நான் சட்டபூர்வமாக நிவாரணம் தேட முயற்சிப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் மல்லையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Indhuindian
டிச 23, 2024 07:50

அப்பா சட்டத்தை மதிக்கிற ஆஸ்மிதான் ஓடி ஓடி ஒளிஞ்சிகிட்டு அரசு நாட்டுக்கு திரும்ப கொண்டுவரதுக்கு எதிரா வழக்குகளை போட்டு வங்கியிலேந்து அடிச்ச பணத்துலே உல்லாசமா இருக்கறவரு பேசற பேச்க்காய் பாருங்க மக்களே. அது சரி வாங்கின கடனுக்கு வட்டின்னு ஒன்னு இருக்கே தெரியுமா அது சரி திருப்பி குடுக்கணும்ன்னு எண்ணம் இருந்தா தானே வட்டியபத்தி கவலை படனும்


Mahendran Puru
டிச 20, 2024 19:50

குழாயடி சண்டை புகழ், ஏதோ வழக்கம் போல அள்ளி விட கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மல்யா


subramanian
டிச 19, 2024 23:27

வழக்குகள் வாய்தா... லண்டன் பயண செலவு எல்லாம் நீதாண் தரணும் வெண்ண வெட்டி என்று நீதிமன்றம் சொல்லும்


GOPAL
டிச 19, 2024 19:52

அண்ணே இங்க ஒரு நாளைக்கு வந்திட்டு போங்களேன் பிறகு பேசலாம் ,புரியுதா


ghee
டிச 19, 2024 11:04

நீ ஒரு எட்டு இந்தியாவுக்கு வாயேன்....அப்புறம் பேச இந்த வாய் இருக்காது


ஆரூர் ரங்
டிச 19, 2024 10:51

நீ தானாக கடனை கட்டியிருந்தால் விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் பசியின் ஆட்களுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கிய கடனுக்கு தள்ளுபடி கேட்டு பார்லிமெண்டில் பலர் பார்க்கும் போதே அன்றைய நிதியமைச்சர் ஜெய்ட்லி பின்னால் ஓடியதும் பின்னர் நாட்டை விட்டே ஓடிய பின்னும் நியாயம் பேசலாமா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 19, 2024 10:26

இவருடைய சொத்தில் கடன் வசூல் செய்யும் ஏஜென்சி ஆட்கள் இந்த வீடு கடனில் உள்ளது என்று கொட்டை எழுத்தில் பெயிண்ட்டில் எழுதவில்லையா?


Bhaskaran
டிச 19, 2024 10:01

முன்பு காப்பீடு நிறுவனத்தில் கடன் வாங்கினால் இரண்டு மடங்குக்கு அதிகமாக வீட்டு கடன் katta vendiya து வரும் அப்படிப்பட்ட பாவிகளில் நானும் ஒருவன்


பேசும் தமிழன்
டிச 19, 2024 07:53

இவனுக்கு கடனையும் கொடுத்து ...அதை கட்டாமல் இருந்த போது .....வெளிநாட்டுக்கு தப்பி ஓட ஆலோசனையும் சொன்னது ....வேறு யாரு.....நம்ம இத்தாலி போலி காந்தி கான் கிராஸ் கட்சி தான் .


samath abdul
டிச 19, 2024 11:37

சொல்லுங்க


Jay
டிச 19, 2024 07:31

மல்யா ஓடிப்போய் எவ்வளவு வருஷம் ஆகிறது? 6000 கோடிக்கு வட்டி, அபராதம் எல்லாம் கணக்கு போட்டால் 14000 கோடிக்கு மேல் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை