உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மஸ்க் கட்சி பொருளாளராக இந்தியர் நியமனம்

மஸ்க் கட்சி பொருளாளராக இந்தியர் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்க் துவங்கியுள்ள 'அமெரிக்கா பார்ட்டி' என்ற கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி வைபவ் தனேஜா, 47, நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, எலான் மஸ்க், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.அந்த கட்சியின் பொருளாளராகவும், ஆவணங்கள் பாதுகாவலராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.டெஸ்லாவின் நிதித் துறை தலைவராக உள்ள வைபவ் தனேஜா, டில்லி பல்கலையில் வணிகவியல் பட்டம் பெற்றவர். மேலும் பட்டய கணக்காளராகவும் உள்ளார்.டெஸ்லா நிறுவனத்தில், அவரது சிறந்த நிதி ஆளுமையே, அமெரிக்கா கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கக் காரணம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை