உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனாவில் அதிநவீன வசதிகளுடன் இந்திய துாதரகத்தின் புதிய கட்டடம் திறப்பு

 சீனாவில் அதிநவீன வசதிகளுடன் இந்திய துாதரகத்தின் புதிய கட்டடம் திறப்பு

பீஜிங்: சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், இந்திய துணை துாதரகத்தின் புதிய கட்டடம் ஷாங்காயில் நேற்று திறக்கப்பட்டது. அங்கு செயல்பட்டு வரும் நம் துணை துாதரகம், 32 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளது. கடந்த 2020ல் லடாக்கில் உள் ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலால் இருநாட்டு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சீனாவின் தியான்ஜென் பகுதியில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தி த்து பேசினார். இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. சமீபத்தில், இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளும் துவங்கப்பட்டன. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் புதிய கட்டடம் நேற்று திறக்கப்பட்டது. ஷாங்னி ங் மாவட்டத்தின் டானிங் பகுதியில் அதிநவீன வசதிகளுடன், 3.54 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் இருந்து, துணை துாதரகம் இன்று முதல் முழு செயல்பாட்டுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார். துாதரக அதிகாரிகள், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் என, 400க்கும் மேற்பட்டோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத் கூறுகையில், “சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காயில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இத்துாதரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த, 1992ம் ஆண்டுக்குபின் முதன்முறையாக சீனாவில் புதிய துாதரகத்துக்கான கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ' 'இதன்மூலம் இருநாடுகளின் உறவு வலுவடையும். இதுதவிர, இருநாட்டு மக்களுக்கும் இடையே நட்பு, வர்த்தகம், பயணம், வணிக சேவைகள் போன்ற தடையற்ற சேவைகள் வழங்க இந்த மையம் வழிவகுக்கும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை