உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

நியூயார்க்:வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படுகிறது, எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்க அரசு புதிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. அதன்படி, எச்1பி விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை வினியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்வு முறை மூலம், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்ட 85,000ஐ தாண்டும் போது, அதிகப்படியான ஊதியம் செலுத்தும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை