அடுத்த காலநிலை மாநாடு போட்டியில் விலகியது ஆஸி., துருக்கியில் நடக்கிறது
பெலம்: காலநிலை மாற்றத்துக்கான அடுத்த உலகளாவிய மாநாட்டை துருக்கி நடத்துகிறது. அதேநேரத்தில் அதற்கு முந்தைய கூட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளன. காலநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கட்டமைத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகள், ஓரிடத்தில் கூடி விவாதிப்பதே சி.ஓ.பி., மாநாடு. தற்போது 3-0வது மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெலம் நகரில் நடக்கிறது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டுக்கான சி.ஓ.பி., - 31 உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கான போட்டியில், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. கடைசி நேரத்தில், போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது. இதையடுத்து, மேற்காசிய நாடான துருக்கியின் அன்டால்யா நகரில் அடுத்தாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் மாநாட்டுக்கு முந்தைய கூட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும்.