உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தோற்கடித்தார் குகேஷ்; மேஜையில் ஓங்கிக்குத்தி அதிருப்தியை வெளிப்படுத்திய கார்ல்சன்

தோற்கடித்தார் குகேஷ்; மேஜையில் ஓங்கிக்குத்தி அதிருப்தியை வெளிப்படுத்திய கார்ல்சன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து அசத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60if7fm9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். இந்த வெற்றி குறித்து குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா கூறுகையில், 'குகேஷின் திறமையை நாம் பாராட்ட வேண்டும். நீண்ட நேரம் அவர் தோல்வியின் விளிம்பில் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து போராடினார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 17:36

குகேஷு ஆசீர்வாதங்கள் வெற்றிகள் தொடர


shanmugam subramanian
ஜூன் 02, 2025 13:55

வணக்கம், திரு. குகேஷ் வெற்றியை மட்டுமே கொண்டும் நமக்கு, அவரின் அழுத்தங்களை உணரமுடியாது. அவரை போன்றோரை உருவாக்குவதில் அரசு மற்றும் ஆர்வலர்களும் தீவிரம் காட்டல் வேண்டும். அதேவேளை தகுந்த அங்கீகாரம் அளித்தல் அவசியம். முயற்சி திருவினையாகட்டும், நல்வாழ்த்துகள்.


V Venkatachalam
ஜூன் 02, 2025 21:31

வணக்கம் ஷண்முகம் அண்ணே எங்க சப்பான் முதல்வர் குகேஷை நேரே வரவழைதது கண்டிப்பாக பாராட்டுவார்.அது ஒண்ணு போதுமே. அப்புறம் என்ன வேணும்?


Pmnr Pmnr
ஜூன் 02, 2025 13:25

இது கார்ல்சன் கோபத்தின் வெளிப்பாடு


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 02, 2025 12:27

உங்களிடம் தோற்ற பிறகு எதிரி கோபமடைந்தால் நீங்கள் மறுமுறை வென்றதாக அர்த்தம் ......


Ramesh Sargam
ஜூன் 02, 2025 11:29

குகேஷுக்கு வாழ்த்துக்கள். Sportsmanship தெரியாத அந்த கார்ல்சனுக்கு என்னுடைய அனுதாபங்கள். வெற்றி முக்கியம். அதைவிட முக்கியம் sportsmanship.


James Mani
ஜூன் 02, 2025 10:38

சூப்பர் வாழ்த்துக்கள்


N Annamalai
ஜூன் 02, 2025 10:01

வாழ்த்துக்கள் .மேலும் முன்னேற வாழ்த்துக்கள் .


sundar
ஜூன் 02, 2025 08:13

வாழ்த்துகள்.கிரிக்கெட் மோகம் குறைந்து , செஸ் , கால்பந்து ,ஹாக்கி போன்ற விளையாட்டுகளை முன்னெடுக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 07:45

Better than the best ஆகிவிட்டார் ...... வாழ்த்துகிறோம் .....


புதிய வீடியோ