உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நார்வே செஸ்; முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி

நார்வே செஸ்; முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார். நார்வேவின் ஸ்டாவஞ்சர் நகரில் சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, தனது 8வது சுற்றில் 5 முறை சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜூ வென்ஜூனை வைஷாலி தோற்கடித்து அசத்தினார். உலக சாம்பியனான வென்ஜூனை வைஷாலி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், 6 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் வைஷாலி 5வது இடத்தில் உள்ளார். இவர் சீனாவின் லெய் டிங்ஜியை விட அரை புள்ளிகள் பின்தங்கியுள்ளார். கடந்த ஆண்டு இதே நார்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 05, 2025 20:49

வாழ்த்துக்கள் வைஷாலி.


kumaran
ஜூன் 05, 2025 16:09

சூப்பர். காங்கிரதுலேஷன்ஸ் நாங்கள் மகிழ்ச்சை அடைக்கிறோம்


அசோகன்
ஜூன் 05, 2025 15:09

விரமங்கைக்கு வாழ்த்துக்கள்...... இவரின் குடும்பமே உலக சாம்பியனாக விளங்குகிறது......


Ramasamy
ஜூன் 05, 2025 14:36

வாழ்துக்கள் சகோதரி


புதிய வீடியோ