உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார் ஈரான் தலைவர் கமேனி

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார் ஈரான் தலைவர் கமேனி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பிறகு அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தடைபட்டது. கடந்த வாரம், காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் தொடங்கியது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள காரணமாக இருந்த டிரம்புக்கு, இஸ்ரேல் பார்லிமென்டில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று அதிபர் டிரம்ப் பேசுகையில், 'ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்' என தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய பேச்சுவார்த்தை நடத்த விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.இது குறித்து அவர் பேசியதாவது: டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப் பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் அவர்கள் ஈரானின் அணுசக்தித் மையங்களை குண்டுவீசி அழித்ததாகக் கூறுகிறார். சரி, கனவு காணுங்கள்.ஈரானுக்கு அணுசக்தி வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்தத் தலையீடுகள் பொருத்தமற்றவை. இவ்வாறு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

thonipuramVijay
அக் 21, 2025 18:59

சரி உங்க நாட்டை அமெரிக்கா தாக்கியிருக்கிறார்கள் .... நீங்க திருப்பி அடிங்க பாப்போம் ...


தாமரை மலர்கிறது
அக் 21, 2025 18:59

கொமைனி கூட ட்ரம்பின் பேச்சை கேட்கமாட்டேங்கறார். இந்த லட்சணத்தில் புடின், க்சிஜின்பிங் அடிபணிய வேண்டும் என்று ட்ரம்ப் ஆசைப்படுகிறார்.


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:34

இவர்கள் முஸ்லீம் நாடு என்று வெறுப்பு இருந்தது அனால் என்று அந்த இஸ்ரேல் கதற கதற வோட விட்டாரோ உயர்ந்து விட்டார் இனி இஸ்ரேல் ஈரான் என்று சொல்ல கூட பயப்படும் நிலையில் தள்ளிவிட்டார்


Field Marshal
அக் 21, 2025 13:06

இப்படியே......


ஆரூர் ரங்
அக் 21, 2025 19:34

ஷியா வை எப்போ முஸ்லிம் ன்னு ஒத்துக்க ஆரம்பிச்ச பாய்? அடப் பாவமே.


Moon
அக் 21, 2025 21:17

அப்படியா! ஓட விட்டாரா? ஹா, ஹா, ஹா. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஜோக்.


Palanisamy T
அக் 21, 2025 10:23

பேச்சுவார்த்தையை நிராகரித்ததாக சொல்லும் இவர் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். நண்டு கொழுத்தால் வலையிலிருக்காதென்றுச் சொல்வார்கள். அது மீண்டும் நினைவிற்கு வந்துவிட்டது. மத்திய கிழக்கில் பயங்கரவாதையை ஊட்டிவிட்டது யார்? அங்கு இனிமேல் அமைதியென்பது வெறும் பகற்க் கனவு .


Thravisham
அக் 21, 2025 11:36

ஆம் உண்மை. அப்பாவி ஈரானிய மக்கள் பெஹல்வி ஷாவை தூக்கியெறிந்து இந்த முல்லாக்களை பதவியில் அமர்த்தினார்களோ அன்றே மத்திய கிழக்கில் பிடித்தது ஏழரை. தானும் முன்னேற மாட்டான் மற்றவனையும் முன்னேற விட மாட்டான்


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:37

ஆயிரம் இருக்கட்டும் இசுரேலுக்கு கொடுத்த அடி மறக்க முடியுமா, எல்லா ஊரிலும் வேலை காட்டிய இஸ்ரேல் தேவை இல்லாமல் டிரம்ப் பேச்சை கேட்டு அவனை தாக்க, இஸ்ரேல் மக்களே ந்தியதகு வை ஏன் ஈரான் மீது தேவை அற்று போர் தொடுத்தாய் என்று கேட்க , ஏன் எனில் ஈரான் கொடுத்த அடி அப்படி இப்போ அடக்கி வாசிக்கிறான் இஸ்ரேல்


SUBBU,MADURAI
அக் 21, 2025 16:49

இனிமேலாவது உன் உண்மையான பெயரில் கருத்தை பதிவிடு...


Ramesh Sargam
அக் 21, 2025 09:41

கோபத்தில் டிரம்ப் ஈரான் மீது வரியை அதிகம் விதிக்கமுடியுமா, இந்தியா, சீனா மீது விதிப்பது போல? டிரம்ப், உலகநாடுகளின் வரி நிர்ணயிப்பவர்.


Field Marshal
அக் 21, 2025 10:28

இரானிலிருந்து எந்த பொருளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவதில்லை .


Raman
அக் 21, 2025 09:16

There is no difference between the two in certain aspects


duruvasar
அக் 21, 2025 08:08

பெரியண்ணன் சொல்வதை கேளுங்கள். அப்பறோம் அவர் எங்க பெரியண்ணன் மாதிரி கையில் சாட்டையை எடுத்துக்கொண்டுவிடுவார். எதிர்த்து பேசறாரே நள்ளிரவைல் வந்து கைது செய்து குண்டாசில உள்ள தலிடப்போறாரு.


Senthoora
அக் 21, 2025 09:16

திரம்புடன் பேச்சு வார்த்தை ஒருநாளும் நம்ப முடியாது, பதவிக்கு வந்து இன்னும் வரிவிதுபற்றி சரியான முடுவு எடுக்கவில்லை, தினம், தினம் ஒன்னு சொல்லுறார்.


N.Purushothaman
அக் 21, 2025 13:54

அது சாதா விடியல் இல்லை ...வெற்றுவேட்டு விடியல் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை