உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப்போட்டியில் இந்திய வீரர்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப்போட்டியில் இந்திய வீரர்

பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் முன்னேறினார். 50 மீ., ரைபிள் பிரிவில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பாட்மின்டன்

அதேபோல் பாட்மின்டன் போட்டியில் ஈஸ்டோனியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

டேபிள் டென்னிஸ்

மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

குத்துச்சண்டை

மகளிர் குத்துச்சண்டையில், 75 கிலோ பிரிவில் நார்வே வீராங்கனை ஹோப்ஸ்டெட்டை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார்.

வில்வித்தை

இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் பாட்மின்டன்

ஆண்கள் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தோனேஷியா வீரர் கிறிஸ்டியை 2- 8 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷயா சென் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஆக 01, 2024 12:00

வாழ்த்துக்கள். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெற வாழ்த்துக்கள்.


Maheskumar Maheskumar
ஆக 01, 2024 08:43

இந்தியா


Yasararafath
ஜூலை 31, 2024 20:53

வாழ்த்துகள்


வாசகர்
ஜூலை 31, 2024 16:31

ஸ்வப்னில் முதல் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ