| ADDED : ஆக 08, 2024 01:48 AM
பாரிஸ்: பளுதுாக்குதல் போட்டியில் பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு, 4வது இடம் மட்டுமே பிடித்தார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் பளுதுாக்குதல் போட்டி துவங்கியது. இதில் 49 பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு (29) பங்கேற்றார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், 202 கிலோ துாக்கி, வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவர், பாரிஸ் ஒலிம்பிக்கிலும், பதக்கம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 199 கிலோ எடை தூக்கிய மீராபாய், 4வது இடம் பிடித்தார். சீனாவின் ஹோவ் ஜிஹுய், ஒலிம்பிக் சாதனையுடன்(206 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார்.அவினாஷ் 11வது இடம்:
3000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் போட்டி பைனலில், இந்தியாவின் அவினாஷ் சாப்லே, 11வது இடம் பிடித்தார். இப்பிரிவில், ஒலிம்பிக் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் அவினாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.