மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
11 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
11 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
16 hour(s) ago
டிரிபோலி : லிபியாவில் கடாபி எதிர்ப்பாளர்கள், முக்கிய நகர்களை நேற்று கைப்பற்றினர். அதேநேரம், கடாபி, லிபியாவை விட்டு வெளியேற முயற்சி செய்வதாக எதிர்ப்பாளர்கள் கூறியதை, லிபிய அரசு மறுத்துள்ளது. லிபியாவில் கடாபி ராணுவத்துக்கு எதிராக சமீபகாலமாக எதிர்ப்பாளர்கள் கை ஓங்கி வருகிறது. கடாபி ராணுவ வசம் இருந்த பல நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, எதிர்ப்பாளர்கள் வசம் விழுந்து வருகின்றன.
அவற்றில், தலைநகர் டிரிபோலியில் இருந்து கிழக்கில் 160 கி.மீ., தொலைவில் உள்ள ஜாவியா மற்றும் மேற்கில் உள்ள ஜிலிடான் ஆகிய நகர்களை நேற்று எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். அதேபோல், கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளம்மிக்க பிரிகா நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, டிரிபோலியில் இருந்து 30 கி.மீ., தொலைவில், எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பாளர்களின் இவ்வெற்றிகளை லிபிய அரசு மறுத்துள்ளது.
அதேநேரம், 'கடாபி தனது குடும்பத்துடன் லிபியாவில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறார். எகிப்து, டுனீஷியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கின்றன' என்ற எதிர்ப்பாளர்களின் பேட்டியையும், லிபிய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து லிபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடாபி தனது குடும்பத்துடன் டிரிபோலியில் தான் தங்கியிருக்கிறார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்ப்பாளர்கள், டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருப்பதால், அந்நகரில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் முயற்சிகள் துவங்கியுள்ளன. இதனால் விரைவில், எதிர்ப்பாளர்கள், டிரிபோலியைக் கைப்பற்றக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
11 hour(s) ago
11 hour(s) ago
16 hour(s) ago