உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உறுதி

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது '' என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது: நான் பிரதமர் மோடியிடம் இப்போதுதான் பேசினேன். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிர்களை இழந்தனர்.இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது. தேவைப்படும் இடங்களில் பிரான்ஸ், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரும். பிரான்சின் ஒற்றுமை மற்றும் நட்பை அவர்கள் நம்பலாம்.பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்துள்ளோம். எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Admission Incharge Sir
ஏப் 25, 2025 10:08

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ச்சீய்னா கூட புறவழியில் சம்பத்தப் பட்டிருக்கலாம். பாக்கிஸ்தானை நாம் தாக்கினால் பாகிஸ்தானுக்கு உதவுவது போல இந்த சப்பை மூஞ்சியும் அருணாச்சல், டோக்லாம் என்று பலமுனைகளில் ஆக்கிரமிக்க முயலுவான். இதையெல்லாம் புரிந்து கொண்டுள்ள நம் தேசத்து நலனில் அக்கறை கொண்டுள்ள மோடிஜி, ஜெய்சங்கர் ஜி, ராஜ்நாத் ஜி, அமித் ஷா ஜி, அண்ணாமலை ஜி ஆகிய அனைத்து தேசியத் தலைவர்களும் மிகச் சரியான பாதையில் நகரத் தொடங்கியுள்ளனர். குருமா, பப்பு போன்ற ஒன்றுக்கும் உதவாத, தங்களை தலைவர் போல காட்டிக்கொள்ளும் சில அல்லக்கைகள், மோடி ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்று கேள்வி எழுப்பினர். இப்பொழுது நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இக்கட்டான சூழலில் அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற உலகின் அனைத்து வல்லரசுகளும், நாடுகளும் இந்தியாவை ஒரே குரலில் ஆதரிப்பதன் பின்னணி நம் தேசத்தின் திரு. மோடி ஜி அவர்களின் வெளி உறவுக்கு கொள்கைகளும், நல்ல எண்ணங்களுடன் கூடிய பல்வேறு வெளி நாட்டுப் பயணங்களும் தான் என்றால் அது மிகையாகாது. சீனாவின் தைரியத்தில் பிச்சைஸ்தான் நம்மைத் தாக்க நினைத்தாலே போதும், அது ஒரேயடியாக பாவம்ஸ்தான் ஆகிவிடும். சீனாவின் காதை பிடித்து முறுக்கத் துடிக்கும் டிரம்ப் அனைத்து பி-2 அணுகுண்டு வீசும் விமானங்களையும் இந்தியாவில் பார்க்கிங் செய்து விடுவார். தேவையில்லாமல் மோடிஜியின் இந்தியாவைச் சீண்டி, பக்கிரிஸ்தானும், சீனாவும் ஆயுளுக்கும் அழப்போகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை