உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ஐ.எஸ்.ஐ., தலைவர் சீனாவுக்கு ரகசிய பயணம்

பாக்., ஐ.எஸ்.ஐ., தலைவர் சீனாவுக்கு ரகசிய பயணம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவுத் துறை ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா உடனான ராணுவம் மற்றும் உளவுத் துறை உறவுகளில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, அந்நாட்டைச் சார்ந்து இயங்குவதை குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த வாரம், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி வாஹீத் அர்ஷத், சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ., உயர் அதிகாரி, அமெரிக்காவுக்கே திரும்பிச் சென்றார். அதேநேரம், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் கலவரம் வெடித்தது. இக்கலவரத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் தான், ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷா, நேற்று, சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சு நடத்துவார் என, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை