| ADDED : நவ 08, 2025 04:33 PM
இஸ்தான்புல்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர், பாக் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qvvjdydj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, இருநாடுகள் இடையே மோதல் வெடிக்க, இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்குதலில் இறங்கினர். இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகளின் தலையீடு எதிரொலியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும், முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து துருக்கியில் இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.இந் நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களிடம் பேசியதாவது; இந்த பேச்சுவார்த்தையின் போது பாக். முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவையாக இருந்தது. அதனால் பேச்சு வார்த்தையை தொடர முடியவில்லை. பேச்சு வார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளன.பாகிஸ்தானின் பொறுப்பில்லாத செயல்கள் தான் பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம். ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்போம். போர் என்பது எங்களின் முதல் தேர்வல்ல. ஆனால் எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இவ்வாறு செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறி உள்ளார்.