உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடுநிலையான விசாரணைக்கு தயார்; நாடகம் ஆடுகிறது பாகிஸ்தான்!

நடுநிலையான விசாரணைக்கு தயார்; நாடகம் ஆடுகிறது பாகிஸ்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது என்று உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mhw429v2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவ அகாடமியில் அவர் பேசுகையில் கூறியதாவது;நம்பகமான விசாரணைகள், ஆதாரங்கள் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. நிரந்தரமான பழியை சுமத்த வேண்டும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு தான் பஹல்காம் சம்பவம். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.பொறுப்பான நாடாக, எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.ஒவ்வொரு முறை இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடக்கும் போதும், இதுபோன்று பாகிஸ்தான் பிரதமர்கள், அதிபர்கள், ராணுவ தளபதிகள் நாடகம் ஆடுவது வழக்கம். அதுபோலவே இப்போதும் பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. தாக்குதலை கண்டித்துள்ள பாதுகாப்பு கவுன்சில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 26, 2025 21:19

உங்களின் அப்பா சார் பெயர் என்ன பாக் தலீவரே ?


M Ramachandran
ஏப் 26, 2025 20:44

உளறு வாயன்.


visu
ஏப் 26, 2025 19:53

இந்தியாவுடன் எல்லையை பகிரும் ஒரே நாடு இந்த பக்கம் பாகிஸ்தான்தான் இதுல வேற எவன் வந்து கொன்று விட்டு போகப்போறான். இதற்கு என்ன விசாரனை


Narasimhan
ஏப் 26, 2025 18:27

பேருக்குத்தான் மக்களாட்சி. இவங்களெல்லாம் டம்மி பீஸ். ராணுவ தளபதி உத்தரவுகளை மீற முடியாது. வாயை திறந்தார்களானால் இவர்களுக்கும் பெனாசிர் இம்ரான் கானுக்கு நடந்ததே நடக்கும்.


ManiK
ஏப் 26, 2025 16:54

என்னடா நடுநிலை இப்போது?!!.. உங்கள் ஆதரவு கோழைகள் தாக்கியது இந்தியாவில்... இப்படி பேசி நாங்கள் கொடுக்கும் தண்டனையை மேலும் கடுமையாக்காதே.


Rasheel
ஏப் 26, 2025 16:43

இதுவரை இருந்த கான் அரசாங்கங்கள் போலி கடுதாசி மட்டும் எழுதிட்டு சும்மா இருந்தானுக. பிரியாணிக்கும் எலெக்ஷன் நிதிக்கு பாக்கிஸ்தான் ஹவாலா பணத்திற்கும் கும்புடு போட்ட காலம், கடந்த 70 ஆண்டுகள். ஆனால் பாக்கிஸ்தான் இந்திய ஆண்மை உள்ள அரசு இப்படி சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. கோடை காலத்தில் பாக்கிஸ்தான் பஞ்சாபி, சிந்து மாநில மக்கள் கிட்ட தட்ட 15 கோடி மக்கள் காலை கடனை முடித்து கை கழுவ கூட தண்ணி இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியதால், அவர்கள் உண்மையில் அடி வயிறு கலங்கி தான் போயுள்ளனர்.


Karthik
ஏப் 26, 2025 15:08

பேசி முடிக்க ஒன்னுமில்லை. இனி முடிச்சுவிட்டுட்டு தான் பேச்சே. எனவே இந்த கபடதாரிகளிடம் பேச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. செஞ்சு முடிப்பது ஒன்றே தீர்வு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2025 14:45

நடுநிலை விசாரணை என்ற பெயரில் அப்படியே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பெரிதாக்கி உலக நாடுகள் கொண்டு செல்ல திட்டம் போடுகிறான் இந்த பயங்கரவாதி


Shankar
ஏப் 26, 2025 14:40

இனி பேசி பிரயோஜனம் இல்லை. மிதி தான்.


VIDYASAGAR SHENOY
ஏப் 26, 2025 14:35

மண்டி போடுகிறான் , ஒரு பேச்சு வார்த்தையும் வேண்டாம் , வச்சு செய்யவேண்டும். அதை செய்வர் மோடி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை