உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு பலனில்லை! : முன்னாள் அதிகாரி வெளிப்படை

இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு பலனில்லை! : முன்னாள் அதிகாரி வெளிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, 'இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனும் இல்லை' என, அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ் கூறியுள்ளார். பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ், 15 ஆண்டுகள் அந்த அமைப்பில் பணியாற்றினார். குறிப்பாக நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நீண்ட காலம் பணியாற்றினார். சி.ஐ.ஏ., குறித்த ரகசிய தகவல்களை கசியவிட்டதற்காக 2007ல் அமெரிக்காவில், 23 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தன் பணியின் போது சந்தித்த அனுபவங்கள், குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்தியாவுடன் வழக்கமான போரில் ஈடுபட்டால், பாகிஸ்தான் தோல்வியைத்தான் தழுவும். நான் சொல்வது அணு ஆயுத போர் பற்றி அல்ல. இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனோ, நன்மையோ கிடைக்கப் போவது இல்லை. தன் சொந்த நலன்களே பாதிக்கப்படும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துகுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து கடுமையான பதில்களை கொடுத்து வருகிறது . கடந்த 2016ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ல் பாலகோட் வான்வழி தாக்குதல் மற்றும் சமீபத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த, 2002ம் ஆண்டில், அல் - குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருந்தது. அதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடன் அமெரிக்காவின் உறவு நன்றாக இருந்தது. முஷாரப் ஒத்துழைப்பை அமெரிக்கா விலைக்கு வாங்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்டின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அமெரிக்கா தனக்கு தேவையானதை செய்து கொள்ள முஷாரப் அனுமதித்தார். இதற்காக பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை வழங்கியது. ஆனால், அந்த நிதிகளை, தன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும், பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கவும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார். யார் இந்த கிரியாகோவ்? ஜான் கிரியாகோவ் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் முன்னாள் அதிகாரி. சி.ஐ.ஏ.,வில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ள கிரியாகோவ், தன் பணியின் முதல் பாதியில் புலனாய்வு அதிகாரியாகவும், 2001 செப்., 11 அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு பின் அமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பாகிஸ்தான் பிரிவு தலைவராகவும் இருந்தார். பாகிஸ்தான் பணிக்கு பின், இவர் சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகளுக்கான துணை இயக்குநரின் நிர்வாக உதவியாளராக உயர்ந்தார். கடந்த 2007ல் பேட்டியொன்றில், சி.ஐ.ஏ., கைதிகளை விசாரிக்கும் போது சித்ரவதை முறைகள் பயன்படுத்துவது குறித்து வெளிப் படுத்தினார். இதையடுத்து, ரகசிய தகவல்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு, 23 மாதங்கள் தண்டனை அனுபவித்தார். பின்னர் அந்த வழக்கு கைவிடப்பட்டது. 'பெண் வேடத்தில் தப்பிய ஒசாமா பின்லேடன்' சி.ஐ.ஏ., முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 2001, செப்., 11ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தேடி வந்தது. ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைகளில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போது, அமெரிக்க படை தளபதிக்கென மொழி பெயர்ப்பாளராக இருந்தவர், அல் -- குவைதா இயக்கத்தின் ஏஜென்ட் என்பதும், அவர் அமெரிக்க ராணுவத்தில் ஊடுருவியிருந்ததும் சி.ஐ.ஏ.,வுக்கு தெரியாது. அமெரிக்க படையால் சுற்றி வளைக்கப்பட்டதையறிந்த பின்லேடன், மொழிபெயர்ப்பாளர் வாயிலாக விடியற்காலை வரை கால அவகாசம் வழங்கும் படியும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, சரணடைவதாகவும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். தளபதியையும் அவர் ஒப்புக்கொள்ள செய்தார். இதையடுத்து, விடியற்காலை வரை படைகள் காத்திருந்த நிலையில், பின்லேடன் பெண் உடையில் வேடமிட்டு, இருளின் மறைவில் ஒரு சரக்கு வாகனத்தின் பின்புறம் ஏறி பாகிஸ்தானுக்-கு தப்பிச் சென்றார். விடிந்தபோது, தோரா போரா மலை காலியாக இருந்தது. இதனால், பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையை அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு மாற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு அவர் கூறினார். போரை தவிர்த்த இந்தியா! பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமீபத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை காங்கிரஸ் விமர்சித்தது. உடன், '2001ல் பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று பா.ஜ., பதிலடி தந்தது. இந்நிலையில், சி.ஐ.ஏ., முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ் கூறியதாவது: இந்திய பார்லி., மீது நடந்த தாக்குதலுக்கு காரணமான, பாக்., ஆதரவு ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும். அதனால், இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால், இந்தியா அமைதி காத்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அதிக இழப்பு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Raj Kumar
அக் 26, 2025 22:00

எதற்கு இந்தியா, பாகிஸ்தான் கேட்டு கொண்டதால் போரை நிறுத்தியது? இப்பொழுது பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றது போல் சொல்கிறது. இந்தியா தொடர்ந்து போரை நடத்தி இருக்கலாம். ஏன் இந்தியா போரை நிறுத்தியது???


RAMESH KUMAR R V
அக் 26, 2025 17:10

அது கடந்த காலம் இது நிகழ் காலம் பழைய தவறுகளை மறக்கலாம் இனி தேசபற்றுமிக்கவர்களாக நல்லது நடக்கட்டும் ஆதரிப்போம் கூட்டாக. வளர்க இந்தியா.


Sridhar
அக் 26, 2025 14:01

மூணு நாளுக்கு மேல போரை தொடர்வதற்கு பாகிஸ்தானுக்கு பொருளாதாரம் இல்ல. அதுனாலதான் எப்போ பாத்தாலும் குண்டு ஒன்னு வச்சிருக்கேன் னு சொல்லி பயமுறுத்தலாம்னு பாக்கறானுங்க. அப்படியே அணுகுண்டை போட முயற்சிச்சாலும், இந்தியாவுக்கு அதை நிறுத்த இப்போது நிறைய கருவிகள் இருக்கு. ஆனால், இந்தியா திரும்ப அவனுங்க மேல் அணுகுண்டை போட்டா அந்த நாடு நிர்மூலமாயிரும். தப்பான மனுசங்கதான், மொத்தமா அழிஞ்சி போனாலும் குத்தமில்லைதான். ஆனாலும் பாவம் ஒருசில நல்லவர்களும் சிறுவர் சிறுமியினரும் இருப்பாங்கள்ல, அத நினைச்சாதான் கவலையா இருக்கும்.


சிவகங்கை சீமான்
அக் 26, 2025 13:52

ஹும் என்ன செய்வது...இங்கே ஒன்றும் தலையாட்டி பிரதமர், நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கும் மந்திரி இல்லை. தீவிரவாதிகள் 300 க்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் பின்னாளில் அரசியல் அழுத்தம் என கேவலமான அரசியல் செய்து வரும் அரசியல் அல்ல.


Senthoora
அக் 26, 2025 08:05

இப்பவெல்லாம் தினம், சிந்தூர், அல்லது பாக்கி யுத்தம் பற்றியே வருது, சீக்கிரம் உண்டு அல்லது இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது, தேர்தல் நேரத்தில் சும்மா மக்களை உசுப்பிட தேவை இல்லை,


கண்ணன்,மேலூர்
அக் 26, 2025 09:09

தேசப்பற்று இல்லாத நீயெல்லாம் உன் டொப்பிள் கொடி நாடான பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதானே எப்போதும் ஏன் தேசத்திற்கு எதிரான வன்ம கருத்துக்களை பதிவிட்டு கொண்டு இருக்கிறாய்.


Senthoora
அக் 26, 2025 10:53

ஐயா இதில் என்ன வன்மம் கண்டீங்க, தேசப்பற்று இருப்பவன் சமாதானத்தைத்தான் விரும்புவான், உங்களைப்போல வன்மம் தூண்டி, நாம இராணுவவீரகளை பலிகடா ஆகத்தேவை இல்லை, நானும் இந்திய இராணுவத்திக்காக பாடுபட்டவன், நீங்களும் இருந்து அனுபவித்தால் புரியும்,


Tamilselvan,Trichy
அக் 26, 2025 12:46

இந்திய இராணுவத்திற்காக பாடுபடவன் எவனும் எப்போதும் உன்னைப் போன்று தேசத்திற்கு எதிரான கருத்தை ஒருபோதும் பதிவிட மாட்டான் ஆனால் நீ இதுவரை போட்ட கருத்துக்களை நீயே ஒரு முறை படித்துப் பார் அப்போதுதான் நீ யார் என்ற உன் உன்மையான முகம் தெரியும்.


oviya vijay
அக் 26, 2025 13:54

தயவுசெய்து எங்களுக்கு நமது தாய்நாடு மற்றும் நமது ராணுவம் மீதான நல் என்னத்தை கெடுக்க வேண்டாம்...


Senthoora
அக் 26, 2025 19:30

எந்த இராணுவத்திலும் இருப்பவன் போரை விரும்பமாட்டான், சமாதானத்தைத்தான் விருப்புவான்.


Ravi
அக் 26, 2025 06:18

2001 பாராளுமன்ற தாக்குதல் நடந்த போது மத்தியில் பா.ஜ.க ஆட்சி. வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.


Kasimani Baskaran
அக் 26, 2025 06:15

ஹிரான ஹில்ஸ் ஒரு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணுவாயுதக்கிடங்கு. அதில் கை வைத்தவுடன்தான் டிரம்பர் ஓடோடி வந்து பாக்கிகளை இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தச்சொன்னார். ஆக இந்தியாவின் அடுத்த இலக்கு அதுவாகத்தான் இருக்கவேண்டும்.


Senthoora
அக் 26, 2025 08:03

டிரம்ப் ஓடிவந்தது, பாக்கிகளுக்காக அல்ல, அங்க அணு கசிவு ஏட்பட்டதால் அணுக்கசிவு சர்வதேச பாதுகாப்புப்படை வந்தது, அண்டை நாட்டில் நிலஅதிர்வு காரணமதாளும் அமெரிக்கா தலையிட்டது .


திராவிட நாடான்
அக் 26, 2025 13:57

நமது ராணுவத்திற்கு தெரியாது விஷயங்கள் உமக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது...


Senthoora
அக் 26, 2025 19:33

கிணற்றுத்தவளைகள் என்னசொன்னாலும் புரியாது. உலக செய்திகளையும் படியுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை