உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது; இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவில் பேட்டி

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது; இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவில் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது, என்றார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிர போர் நடந்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இணைந்து ஈரானை தாக்கியது. அதன் பின், இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அழைத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து வைத்தார். இந்தாண்டில் இருவருக்கு இடையே நடக்கும் மூன்றாவது சந்திப்பு இது. விருந்தின் போது பாலஸ்தீனத்தின் காசாவில் போரை நிறுத்தும்படி டிரம்ப் வலியுறுத்தினார்.

சலுகை கிடையாது

இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே இது தொடர்பாக கத்தாரில் மறைமுக பேச்சு நடந்து வருகிறது. இதற்கிடையே விருந்துக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது போர் நிறுத்தத்திற்கு எது தடையாக உள்ளது என, அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''எந்தத் தடையும் இல்லை என்று நினைக்கிறேன். பேச்சுக்கள் மிகவும் சிறப்பாக போய்க் கொண்டுள்ளன,'' என்றார். போர் நிறுத்தம் குறித்து பேசிய நெதன்யாகு, பெரிய சலுகைகள் எதுவும் காட்டப்படாது.

தனிநாடு

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன அரசுகள் பயங்கரவாதிகளுக்கான பதுங்கு குழிகளைக் கட்டி, எங்கள் நாட்டிற்குள் அவர்களை அனுப்பி படுகொலைகளையும், பலாத்காரத்தையும் அரங்கேற்றினர். ''காசா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது,'' என்றார்.

நோபல் பரிசுக்கு பரிந்துரை

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த மோதல் நான்கு நாட்களில் முடிவுக்கு வந்தது. போரை நிறுத்தியதால், டொனால்டு டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர் கூறியிருந்தார். பாகிஸ்தானை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரை கடிதத்தை விருந்தின் போது டிரம்புக்கு வழங்கினார். அதை பெற்றுக்கொண்டு ஆச்சரியமடைந்த டிரம்ப், 'உங்களிடம் இருந்து இது கிடைப்பது அர்த்தப்பூர்வமானது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Indian
ஜூலை 10, 2025 12:31

பாலஸ்தீனர்கள் பக்கத்துக்கு நாடான ஜோர்டான் னிலிருந்து குடியேறியவர்கள் ...பூர்வ குடிகள் என்றால் அது யூதர்கள் தான் . பாலஸ்தீனம் என்ற நாடே கிடையாது


Bahurudeen Ali Ahamed
ஜூலை 09, 2025 10:48

பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கமுடியாதா? இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன் அந்த நிலப்பரப்பு எல்லாம் பாலஸ்தீன் என்ற நாடுதான் இருந்தது பிறகு அகதிகளாக வந்த யூதர்களுக்கு நாட்டை பிரித்து கொடுத்ததற்கு பிறகு யூதர்களுக்கு அளித்தது போக மீதியுள்ள நிலப்பரப்பு பாலஸ்தீன் என்ற நாடாகதான் இருந்தது ஆள்பலமும் பணபலமும் இருந்த காரணத்தினால் தான் மட்டும் வாழ பிறரை அழிக்கலாம் என்ற அநியாய யூத எண்ணத்தை நிறைவேற்ற நிலங்களை அபகரித்ததும் அல்லாமல் பெண்கள் குழந்தைகளை கொத்துகொத்தாக கொன்று குவிக்கும் இஸ்ரேல் பயங்கரவாதிகள் உங்களுக்கு ராணுவம் தன் நிலத்தை மீட்க போராடுபவர்கள் தீவிரவாதிகள் நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்


Mecca Shivan
ஜூலை 09, 2025 12:19

பாலஸ்தீனில் இஸ்லாமியர்கள் வருவதிற்கு முன் அது யூத நாடுதான் ..அவர்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள் .. வரலாறு தெரியாமல் உளறக்கூடாது ..


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 12:20

பாலஸ்தீன தனி நாட்டை ஆண்ட பாலஸ்தீன தனி அரசர் ஒருவரை கூறுங்கள் பார்ப்போம். அப்படி ஒரு நாடே இருந்ததில்லை. யூதர் எனும் முழு இனத்தையும் அரக்கர்கள் என்பது மட்டமான இன அழிப்பு வாதம். மதவெறுப்பு மட்டுமே அப்படி ஒரு பிரச்சினையை உருவாக்குகிறது. இஸ்ரேல் 4000 ஆண்டு பாரம்பரிய நாகரீகம் மிக்க நாடு. அப்போது அரபிகள் நாடோடிகளாக அடிமை வியாபாரமும் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.


Keshavan.J
ஜூலை 09, 2025 14:16

நீ உருட்டுமா, தினமும் இப்படி சொல்லி தானே மூளை சலவை செய்கிறான் உன் முல்லா. இன்னும் கொஞ்ச நாளிலே இந்தியாவுக்கு முன்னாலே பாக்கிஸ்தான் இருந்தது என்று கூட சொல்லுவே. .


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 10:18

பாலஸ்தீனம் என்றுமே தனி நாடாக ஆளப் பட்டதில்லை. முற்காலத்தில் இஸ்ரேல் கேனான் எனும் இரு முடியாட்சி நாடுகளே இருந்தன. பாலஸ்தீன நாடு என்பது அரபு நாடுகள் உருவாக்கிய கற்பனை. பாலஸ்தீன அகதிகளுக்கு அரபு நாடுகளில் இடம் கொடுப்பதில்லை. தனி பாலஸ்தீனம் உருவானால் ஒரு வளமும் இல்லாமல் நிரந்தரமாக பிச்சை எடுத்தே பிழைக்க வேண்டியிருக்கும்.


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 10:11

இவர் யார்? அங்கீகரிக்க? பாலஸ்தீனம் தனி நாடுதான்.


Mecca Shivan
ஜூலை 09, 2025 10:09

ஹமாஸை தவிர்த்தால் பாலஸ்தீனம் அமைதியாக இஸ்ரேலுடன் இணக்கமாக வாழமுடியும். பாலஸ்தீனம் என்ற நாடு இருந்தது இருக்கிறது இருக்கும்


nisar ahmad
ஜூலை 09, 2025 09:57

ஏன் இந்தியாவே நாடாக இருக்கக்கூடாது அமெரிக்காவிடம் கொடுதௌதுடலாமா?


Mecca Shivan
ஜூலை 09, 2025 12:18

MR ஆட்டு மூளை .. இதை சொன்னது இந்தியா அல்ல .. தற்குறி என்றால் நீங்கள்தான்


Keshavan.J
ஜூலை 09, 2025 14:26

அய்யா கொஞ்சம் வாய் மூடுங்கள். இப்படி சொல்லி சொல்லி தான் இஸ்ரேலை உசுபேத்தி அடிமேல் அடி வாங்கிறங்க . இன்னும் கஜினி முகமத் டைம்லே இருக்கீங்க. கொஞ்சம் நிகழ் காலத்துக்கு வாங்க.


Svs Yaadum oore
ஜூலை 09, 2025 09:19

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது என்று இஸ்ரேல் ......ஆனால் விடியல் திராவிடனுங்க எப்போதோ பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் ....சமூக நீதி மத சார்பின்மை விடியலுக்கு ரொம்ப முக்கியம் ....வடக்கன் என்றால் விடியலுக்கு ஆகாது ......ஆனால் மணிப்பூர் வடக்கன் பங்காளதேஷி வடக்கன் காங்கிரஸ் இத்தாலி வடக்கன் என்றால் விடியலுக்கு மத சார்பின்மையாக கண்ணில் அப்படியே தானாக கண்ணீர் வடியும் ...


Ramaraj P
ஜூலை 09, 2025 09:08

இஸ்ரேலை சொறிந்து விட்டு சொறிந்து விட்டு இஸ்ரேல் நிலப்பரப்பை அதிகப் படுத்துவது இஸ்லாமிய அமைப்புகள் தான்.


Rajasekar Jayaraman
ஜூலை 09, 2025 08:54

விருந்து வைத்து விருதுக்கான கடிதம் பெற்றுக்கொண்ட டிரம்ப்.


GMM
ஜூலை 09, 2025 07:42

பாலஸ்தீனம் தனி நாடக அங்கீகரிக்க கூடாது. நாடு என்றால் கட்டுபடுத்த கூடிய படைபலம் தேவை. உள்நாட்டு மக்கள் தேவைக்கு உற்பத்தி தேவை. தீவிரவாதிகள் கொண்டு நாட்டை உருவாக்க கூடாது. பங்களாதேஷ் , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட நாடக இருக்க கூடாது. சர்வதேச அங்கிகாரம் ரத்து செய்ய வேண்டும்.


சமீபத்திய செய்தி