உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும்.வெண்கல பதக்கத்திற்கு நடந்த போட்டியில், இந்தியாவின் மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி தென் கொரியாவின் வோன்ஹோ லீ - யீ ஜென் ஜோடியை 16- 10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. மொத்தம் இரண்டு வெண்கல பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.

முதல் இந்தியர்

ஏற்கனவே, துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனுபாகர் வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறார்கள்! வெண்கலம் வென்ற மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மனுவைப் பொறுத்தவரை, அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம், இது அவரது சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வாசகர்
ஜூலை 30, 2024 19:53

வாழ்த்துக்கள், இரட்டை பதக்கம் வாங்கிய மனுவுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்.


Natarajan Natarajan
ஜூலை 30, 2024 17:16

verygoodindia


Easwar Kamal
ஜூலை 30, 2024 17:12

வாழ்த்துக்கள். உங்களின் திறமைகளை இழிவு படுத்த சில அமைச்சர் கூட்டம் இருக்கும். இந்த நாய்களுக்க தயவுசெய்து கஷ்ட பட்டு கிடைக்கும் பரிசு பொருட்களை தூக்கி எரிய வேண்டாம். மக்களே இந்த இன பிறவிகளை தூக்கி எறிவார்கள். மேலும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அழகு சேருங்கள்.


Swaminathan L
ஜூலை 30, 2024 16:47

இருவரும் நிதானமாக, மிகக் கவனமாக போட்டியிட்டனர். ஒன்றிரண்டு செட்களில் ஒருவர் குறைந்த ஸ்கோர் செய்தபோது மற்றவர் அதிக ஸ்கோர் செய்து வெற்றியைப் பெற்றனர். கொரிய அணியின் ஆண் வீரர் சுமாராகவே போட்டியிட்டார்.


R.Natatarajan
ஜூலை 30, 2024 16:44

உங்களுடைய இரு பதக்கங்களிலும் மற்ற இந்திய வீரர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் வாழ்த்துக்கள்


தத்வமசி
ஜூலை 30, 2024 14:54

பிரமாதம். வாழ்த்துக்கள். முதல் வெற்றியிலேயே இரண்டு பதக்கங்கள். இரட்டை வாழ்த்துக்கள். இந்தியாவின் பெருமையை மேலும் அடுத்து வரும் போட்டிகளில் நமது வீரர்கள் நிலைநாட்டுவார்கள்.


Thiyagarajan S
ஜூலை 30, 2024 14:20

வாழ்த்துக்கள்..... தங்க இளையவர்களே தங்கம் எப்ப வாங்க போறீங்க.....????


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி