உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது: 70 பேர் காயம்

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது: 70 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மீட்பு பணிகள் தீவிரம்

இது குறித்து இம்மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா கூறுகையில்; ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி குடியரசு பகுதியில் சென்ற ரயில் வளைவுபகுதியில் திரும்பிய போது தடம் புரண்டு கவிழ்ந்தது. மொத்தம் இந்த ரயிலில் 215 பேர் பயணித்துள்ளனர். 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். 20 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

samvijayv
ஜூன் 27, 2024 11:18

தார்மிக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் மோடி.


Velan Iyengaar
ஜூன் 27, 2024 10:37

நம்ம ஊரில் நடு பெர்த் அறுந்து கீழே விழுந்து கீழ் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருந்த ஆள் சாவு... அது குறித்து கூட எழுதலாமே?? நம்ம ரயில்வே லட்சணம் இப்படி இருக்கு


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 11:29

பஸ் சீட் பெயர்ந்து நடத்துனர் சாலையில் விழுந்தது? படிக்கட்டு உடைந்து மாணவர்கள் இறந்தது, பேருந்து தரை ஓட்டையால் பெண் சாலையில் விழுந்த நிகழ்வுகள் திராவிட மாடலுக்கு பெருமை சேர்ப்பவையா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை