உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் விமானங்கள் மோதல்

அமெரிக்காவில் விமானங்கள் மோதல்

நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத் தில் 'டெல்டா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் தரையிறங்கி, விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, புறப்பட தயாராக இருந்த மற்றொரு விமானம், தரையிறங்கிய விமானத்துடன் மோதியது. இரு விமானங்களின் வேகமும் குறைவாக இருந்ததால் பெரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை உடைந்து துண்டானது. மற்றொரு விமானத்தின் முன் பகுதியும், விமானி அறையின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. விமான பணிப்பெண் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இரு விமானங்களிலும் இருந்த மொத்தம் 93 பயணியர் உள்ளிட்டோர் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு விமான ஆணையத்தின் உத்தரவின்படி விசாரணை நடந்து வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து அமெரிக்காவில் அடுத்தடுத்து விமான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 29ல் வாஷிங்டன் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானமும், ஹெலிகாப்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 10ம் தேதி 10 பேருடன் சென்ற சிறிய ஜெட் விமானம் அலாஸ்காவில் விபத்துக்குள்ளானது. அதே மாதம், ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் இரு தனியார் ஜெட் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ