UPDATED : ஜூலை 26, 2025 09:47 PM | ADDED : ஜூலை 26, 2025 05:47 PM
மாலே: மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி மாலத்தீவு சென்றடைந்தார். நேற்று பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் முகமது முய்சு சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வ குறித்து ஆலோசிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qoa8dju1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலத்தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் இன்று அங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் மாலேயில் உள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் நடக்கும் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு நடந்த அணிவகுப்பு மரியாதையையும், நிகழ்ச்சிகளையும் மோடி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டார்.மகிழ்ச்சிசுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்த முக்கியமான நேரத்தில் மாலத்தீவு மக்களின் வளமான கலாசார பாரம்பரியத்தையும், துடிப்பான உணர்வையும் வெளிப்படுத்தியது. கடந்த ஆண்டில் மாற்றத்திற்கான பயணத்தையும் குறிக்கிறது. அதன் பண்டைய கடல்சார் மரபுகளில் இருந்து காலநிலை மாற்றம் போன்ற முக்கியமான துறைகளில் உலகளாவிய தலைமை வரை மாலத்தீவுகள் உலக அரங்கில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. மாலத்தீவு மக்களுக்கு எங்களுக்கு வாழ்த்துகள்.https://x.com/narendramodi/status/1949091005476606181
பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றை இந்தியாவும், மாலத்தீவும் நீண்ட காலமாக பகிர்ந்து வருகின்றன. மக்கள் இடையேயான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பால் எங்கள் உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மாலத்தீவு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், முன்னேற்றத்துக்கும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.https://x.com/narendramodi/status/1949091012619468996
மாலத்தீவில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு கிளம்பினார்.