உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்: ஷீ ஜின்பிங்கிடம் மோடி வலியுறுத்தல்

எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்: ஷீ ஜின்பிங்கிடம் மோடி வலியுறுத்தல்

கஜன்: '' எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது மிகவும் முக்கியமானது'', என சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்த போது பிரதமர் மோடி கூறினார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். அங்கு, ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(அக்.,23) பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசினார்.எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

முக்கிய கட்டம்

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறியதாவது:கஜன் நகரில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐந்தாண்டுகளில் முதல் முறையாக தற்போது தான் முதல்முறை சந்தித்து உள்ளோம். நமது சந்திப்பு குறித்து, இருநாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.இந்தியாவும் சீனாவும், பழங்கால நாகரிகம் கொண்டதுடன், வளர்ந்து வரும் முக்கிய நாடுகள். நாம் இருவரும் நவீனமயமாக்கல் முயற்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.நமது நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா சீனா உறவு முக்கியமானது. எல்லையில் 4 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு ஏற்பட்ட தீர்வு வரவேற்கத்தக்கது. எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவையே நமது உறவுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

நம்பிக்கை

அதிக தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு கொண்டிருப்பதுடன், கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும். சர்வதேச கடமைகளை நமது தோளில் ஏற்றுக் கொண்டு செயல்படுவது முக்கியம். திறந்த மனதுடன் பேசுவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. நமது ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வழிநடத்தும்

சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்தேன். இந்தியா - சீனா உறவானது, இரு நாட்டு மக்களுக்கும், இந்த பிராந்தியத்திற்கும், சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை , மரியாதை ஆகியவை இரு தரப்பு உறவை வழிநடத்தி செல்லும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதல்முறை

இருவரும் 2020க்கு முன், 18 முறை சந்தித்துள்ளனர். எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினர் மோதிக்கொண்ட பிறகு, இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நிகழவில்லை. ஐந்தாண்டுக்கு பிறகு இப்போது தான் முதன் முறையாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.V. Iyer
அக் 24, 2024 04:48

சைனாவுக்கு இப்போது தைவான்தான் முக்கியம். அதனால்தான் இந்த உடன்படிக்கை. இவர்களை எதற்கும் நம்பக்கூடாது.


சிவராஜ்
அக் 23, 2024 21:50

நமது பிரதமர் மோடி அவர்களை நம்பி செயல்பட வேண்டிய கட்டாயம் உலக நாடுகளில் உள்ளது.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 20:52

மோடி சொந்த நாட்டின் ராணுவ பலத்தை அதிகப்படுத்துறார் .... ஆகவே லுங்கிபாய்ஸ், முன்களப்ஸ், பிரிவினைவாதிஸ் இவர்களுக்கெல்லாம் எரிச்சலா இருக்கும் .......


ஆனந்த்
அக் 23, 2024 20:28

இந்த சந்திப்பினால் பலன் ஏதும் இருக்குமா? இனியாவது சீனா நம்பிக்கை துரோகம் செய்யாமல் சொன்ன சொல்லை காப்பாற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எது எப்படியோ இது இந்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.


அப்பாவி
அக் 23, 2024 20:28

அமைதி தானே... ஒக்கே. அப்போ மாசம் இன்னும் ஒரு பத்து பில்லியன் டாலருக்கு இறக்குமதியை அதிகமாக்குங்கோ. 2025 வர அமைதிக்கு ஜிங் ஜிங் கேரண்ட்டி.


aaruthirumalai
அக் 23, 2024 20:09

சீனாவை நம்ப கூடாது.


Ramesh Sargam
அக் 23, 2024 20:03

சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு பிடிக்காத வார்த்தை அமைதி. அவரிடம்போய் பிரதமர் அமைதியை பற்றி பேசுவது, அமைதியை நிலைநாட்ட சொல்வது ... என்னமோ போங்க.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 23, 2024 19:28

முகத்துக்கு முன்னால் சிரிச்சி பேசி முதுகுல குத்துறவன்....இந்த சைனா காரன்.... கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் பிரதமர் சார்....!!!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 20:50

நல்லவேளை ...... மோடிக்கு தெரியாத விஷயத்தை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள் ......


shalini
அக் 23, 2024 19:25

இந்த சந்திப்பால் எல்லை பிரச்னை தீர்ந்து, நாடுகள் முன்னேற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை