உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு, இரு நாடுகள் தீர்வு காண இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அதே நேரத்தில், காசாவின் மோசமான நிலைமை குறித்து இந்தியா மீண்டும் மீண்டும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, 'பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும். காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. காசா- இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்' என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நட்பை வலுப்படுத்தணும்

இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுடன் நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
செப் 23, 2024 18:18

நல்ல நடிப்பு தான்!


அப்பாவி
செப் 23, 2024 17:18

அதான் ஓட்டெடுப்பிலிருந்து விலகிட்டோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிச்சோம். நேத்தஞாஹுவை கட்டிப்புடிச்சோம்.


Sridhar
செப் 23, 2024 12:27

பாலஸ்தீனிய மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலொழிய அங்கு அமைதி திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை. ஹமாஸ் எதோ தனி தீவிரவாத அமைப்பு போல எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், ஒவ்வொரு பாலஸ்தீனியறும் ஹமாஸின் ஒரு அங்கமே இந்தியாவில் தேசம் பிளவுபட்ட பின்பும், கொடூர வன்முறைகள் பல அரங்கேறிய பிறகும், இந்தியர்கள், இஸ்லாமியர்களை அரவணைத்து அவர்களும் நம் நாட்டிலேயே வசிக்கட்டும் என்று ஒரு நிலைப்பாடு எடுத்ததைப்போல, பலஸ்தீனியர்க்ளும் யூதர்களை அரவணைக்கும் போக்கை கடைபிடிக்கவேண்டும். பார்க்கப்போனால், யூதர்கள் பாலைவனமாக இருந்த நிலத்தை வளப்படுத்தி பலஸ்தீனியர்கள் பொருளாதாரத்தையும் மலர செய்திருக்கிறார்கள். இன்றுவரை அவர்களுக்கு வேலை கொடுத்து வாழ்வளிக்கும் யூதர்களுக்கு எதிரான மனப்போக்கை கைவிட்டுவிட்டு, அனுசரணையாக சென்றால், அவர்கள் தலைமுறை நன்றாக இருக்கும்.


Bahurudeen Ali Ahamed
செப் 23, 2024 14:31

ஸ்ரீதர், நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். பாலஸ்தீனியர்கள்தான் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு இடமளித்து காப்பாற்றியவர்கள். யூதர்கள் புத்திசாலிகள் ஆனால் சுயநலமிக்கவர்கள் இவர்கள் பாலைவனத்தை வளப்படுத்தினார்கள் யாருக்காக யூதர்களுக்காக மட்டும்தான், மேலும் யூதர்கள் கஷ்டத்தில் உதவிய பாலஸ்தீனியர்களை வெளியேற்றி விட்டு தங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்து பலவித இடையூறுகளை பாலஸ்தீனியர்கள் மீது ஏற்படுத்தினார்கள். உங்களிடம் ஒன்று கேட்கிறேன் சகோ, அபயம் கேட்டு உங்களிடம் ஒரு குடும்பம் வருகிறது நீங்களும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறீர்கள் வீட்டு கொல்லையில் குடில் அமைத்து தங்குகிறார்கள், சிறிது காலம் கழித்து அந்த குடும்பத்தின் சொந்தக்காரர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கும் தங்க இடம் வேண்டும் என்று கூறி அடைக்கலம் அளித்த உங்களை உங்கள் வீட்டை விட்டு வெளியேற்றி அந்த உங்களின் வீட்டில் அவர்கள் குடிபுகுந்தால், நீங்கள் சந்தோஷமாக வீட்டுக்கு வெளியில் உள்ள அந்த அகதிகள் குடியிருந்த குடிலில் தங்குவீர்களா அல்லது உங்கள் எதிர்ப்பை காட்டுவீர்களா


RAJ
செப் 23, 2024 11:57

ஹரி.. செம கமெண்ட்.


ஆரூர் ரங்
செப் 23, 2024 10:59

எத்தனையோ பணக்கார அரபு நாடுகள் அருகிலிருந்த போதும் பாலஸ்தீன மக்கள் ஐரோப்பிய நாடுகளில் குடியேற முயல்கின்றனர்?. ஷரிஅத் படி நடக்காத அரசுகளின் கீழ் தஞ்சம் புகுவது பாவமாயிற்றே. அரபு நாடுகள் பாலஸ்தீன மக்களை எற்றுக் கொண்டு புண்ணியம் தேடலாம்.ஆனால் ஒன்று. தனி பாலஸ்தீன நாடு அமைவதை இஸ்ரேல் என்றும் ஏற்காது. அதிலுள்ள ஆபத்து அவர்களுக்குத் தெரியும்


Bahurudeen Ali Ahamed
செப் 23, 2024 19:34

ஆரூர் ரங் அவர்களே தங்களுக்கு வரலாறு தெரியாதா என்ன? இஸ்ரேலியர்கள் அகதிகளாக கையில் ஒன்றுமே இல்லாமல் குழந்தை குட்டிகளுடன் வந்தபோது தங்க இடம் அளித்து பாதுகாத்தது பாலஸ்தீன் மக்கள், ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டின கதையாய் இருக்கிறது இப்போதுள்ள நிலைமை, இஸ்ரேலியர்கள் சுயநலவாதிகள், நம்பிக்கை துரோகிகள்.


N.Purushothaman
செப் 23, 2024 09:50

பாலஸ்தீனத்தை நாடாக அறிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ..இப்படி போர் செய்து கொண்டே இருந்தால் இரு தரப்பிற்கும் பெரும் இழப்பே மிஞ்சும் ...அமைதி திரும்ப வேண்டும் ..ஹெஸ்புல்லா அமைப்பு வேறு தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இப்போது கடுமையான இழப்புக்களை சந்தித்து கொண்டு உள்ளது ....மறுபுறம் இஸ்ரேலுடன் பேச்சும் நடத்துகிறது ... தேவைப்பட்டால் இரு நாட்டிலும் மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அவர்கள் அமைதி திரும்ப கடுமையாக போராட வேண்டும் ....குறிப்பாக தொடர் உண்ணாவிரதம் போன்ற அகிம்சை முறையை கையிலெடுத்து போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர உறுதியுடன் செயல்பட வேண்டும் ...


SRIDHAAR.R
செப் 23, 2024 09:46

இந்துக்களை காப்பாற்றுபவரை ஆதரியுங்கள் நம் தேசமே பெரிது என நினையுங்கள்


அரசு
செப் 23, 2024 09:24

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.


Mario
செப் 23, 2024 09:12

இதெல்லாம் சரி,மணிப்பூர் எப்ப போறீங்க


Hari
செப் 23, 2024 10:06

Mario how you survive in London with little brain


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 10:30

புலிகேசி மன்னர் வேங்கைவயல், கள்ளக்குறிச்சி போவதற்கு முன்பே ......


Sankare Eswar
செப் 23, 2024 09:11

நீங்கள் எவ்வளவு நாளது செய்தாலும் பிரதமர் அவர்களே... இந்தியா பணத்தில் தின்று கொழுத்த இங்குள்ள பாக்கி ஆதரவு செம்மறி ஆட்டு மூளை தீவிரவாதிகளுக்கு நன்றியிருக்கப்போவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை