மேலும் செய்திகள்
கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு
27 minutes ago
ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அதிபர் சி றில் ராமபோசாவை நேற்று சந்தித்த பிரதமர் நரே ந்திர மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சு நடத்தினார். 'ஜி - 20' எனப்படும், 20 பெரிய பொருளாதார நாடுகள் இணைந்த கூட்டமைப்பில், இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தாண்டுக்கான ஜி - 20 அமைப்பின் உச்சி மாநாடு, தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் முடிந்தது. மாநாட்டின் முதல் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, பாரம்பரிய அறிவு களஞ்சியம் அமைப்பது, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் துவங்குவது உள்ளிட்ட யோசனைகளை வழங்கினார். தென் ஆப்ரிக்கா, வெள்ளை நிற மக்களிடம் இன பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா இந்த மாநாட்டை புறக்கணித்தது. ஆப்ரிக்க கண்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக தென் ஆப்ரிக்கா உள்ளது. இருதரப்பு வர்த்தக உறவு, 2023 - 24ம் நிதியாண்டில், 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2000 - 2024 வரை இந்திய தொழில் நிறுவனங்கள் தென் ஆப்ரிக்காவில் மருந்து, மென்பொருள், ஆட்டோமொபைல், வங்கி மற்றும் சுரங்க துறைகளில், 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், தென் ஆப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இது குறித்து, சமூக வலைத ளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா - தென் ஆப்ரிக்கா உறவை விரிவாக்குவதற்கான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம். 'வர்த்தகம், கலாசாரம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, அரிய கனிமங்கள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது பற்றி பேசினோம்' என, குறிப் பிட்டார்.
தென் ஆப்ரிக்காவில், ஜி - 20 மாநாட்டுக்கு இடையே, இந்தியா - பிரேசில் - தென் ஆப்ரிக்கா தலைவர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். நம் முத்தரப்பு கூட் டமைப்பு ஒற்றுமை, ஒத்துழைப்பு, மனிநேயம் என்ற செய்தியை உலகிற்கு வழங்க வேண்டும். மனிதனை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் இன்றியமையாதது. அதற்காக இந்தியா - பிரேசில் - தென் ஆப்ரிக்கா இணைந்த டிஜிட்டல் புதுமை கூட்டணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
27 minutes ago