உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். இந்தியா- அமரிக்கா உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் தற்போது சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தியா, ரஷ்யாவில் இரு்து இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். நான் அதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். நாங்கள் இந்தியாவின் மீது மிகப் பெரிய வரியை விதித்தோம். 50 சதவீதம் மிக அதிகமான வரி. உங்களுக்கு தெரியும். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தார். பிரதமர் மோடியுடன் நான் மிகவும் நன்றாக பழகுகிறேன். இவ்வாறு டிரம்ப் பதில் அளித்தார்.

சிறப்பாக நடக்கிறது

இந்தியா மற்றும் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ''ஒப்பந்தம் சிறப்பாக நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
செப் 06, 2025 07:55

அதனால் தான் பயங்கரவாதிகளை ஆட்டரிக்கும் பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆட்டரவு தெரிவிக்கிறீர்கள் .....உங்களின் எதிரி நாடு என்று நீங்கள் கூறும் சீனாவுக்கு கூட வரியில்லை .... ஆனால் நட்பு நாடு என்று நீங்கள் கூறிக்கொள்ளும் இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி ....ஆடுங்கள் ....இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி ஆடுவீர்கள் என்று பார்க்கலாம்.


Sun
செப் 06, 2025 07:40

அமெரிக்கா இந்தியாவிடம் பணிந்ததா? இல்லை இந்தியா அமெரிக்காவிடம் பணிந்ததா? டிரம்ப் மோடியிடம் பணிந்தாரா? இல்லை மோடி டிரம்பிடம் பணிந்தாரா? இப்ப சொல்லுங்க. ராகுல்


SUBBU,MADURAI
செப் 06, 2025 07:34

ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் உருப்பட்டதில்லை. எ.கா. ஈராக்,ஆப்கானிஸ்தான், ஏமன், மற்றும் சில நாடுகள்.அமெரிக்காவை பொறுத்தமட்டில் அவர்களுக்கு அடி பணிந்து இருக்கும் வரை அமைதியாக இருப்பார்கள் கொஞ்சம் எதிர்த்து பேசினால் கையை பிடித்து முறுக்கி அதாவது அதிக வரி மற்றும் பொருளாதார தடை என்று மிரட்டி அவர்களின் வழிக்கு கொண்டு வர பார்ப்பார்கள். அதையும் மீறி நம்மைப் போல் எதிர்த்து நின்று முரண்டு பிடித்தால் கடைசியில் நம் காலில் விழுந்து விடுவார்கள். இப்போது அதிபர் டிரம்ப் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை எனவே பணிந்து போக ஆரம்பித்து விட்டார்கள்.


Kasimani Baskaran
செப் 06, 2025 07:31

அதானே..


சமீபத்திய செய்தி