உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பீட்சா வினியோகித்த போலீஸ்

அமெரிக்காவில் பீட்சா வினியோகித்த போலீஸ்

அரிசோனா : அமெரிக்காவில் உணவு நிறுவன டெலிவரி ஊழியரை, வழக்கு ஒன்றில் கைது செய்த நிலையில், அவர் வினியோகிக்க வேண்டிய பீட்சாவை தாங்களாகவே கொண்டு சென்று வாடிக்கையாளரிடம் போலீசார் வழங்கினர்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், டெம்பே பகுதியைச் சேர்ந்தவர் தனியார் உணவு நிறுவன ஊழியர். இவர் சமீபத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த பீட்சாவை வினியோகிக்க சென்றார்.அப்போது போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இருப்பினும் அவர் வினியோகிக்க வைத்திருந்த பீட்சாவை என்ன செய்வது என யோசித்த போலீசார், அதை தாங்களே எடுத்துச் சென்று, அந்த வாடிக்கையாளரிடம் வழங்க முடிவு செய்தனர். கைதான ஊழியரின் மொபைல் செயலியில் குறிப்பிட்டிருந்த முகவரியை குறித்துக் கொண்டு, அந்த குடியிருப்புக்குச் சென்று பீட்சாவை வழங்கினர்.போலீசார் பீட்சா கொண்டு வந்ததை பார்த்து, அதை ஆர்டர் செய்த பெண் ஆச்சரியம் அடைந்தார்.இந்த வீடியோ காட்சிகளை டெம்பே போலீசார் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, 'பாதுகாப்போ அல்லது பீட்சா டெலிவரியோ நகரத்துக்கு 24 மணி நேரமும் சேவையாற்ற காத்திருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 16, 2025 13:50

இதில் என்ன தவறு ஏதோ ஒரு வேலை


Kiran
ஜூலை 16, 2025 08:50

இந்த செய்தியை பாருங்க அதுதான் வல்லரசு. தன்நல அரசியல் வாதிகளே அரசியல் கட்சிகளே திருட்டு திராவிட கட்சிகளே இந்த செய்தியை பாருங்க. ரவுடி ஒருவனை அடித்து கொன்றால தண்டனை வாங்கி கொடுக்கலாம்.. காக்கி சட்டை போட்டவனே அடித்து அப்பாவிகளை கொன்றால் அவர்கள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா.


skrisnagmailcom
ஜூலை 16, 2025 08:31

இது ஒரு பப்ளிசிட்டி ட்ராமா


Kasimani Baskaran
ஜூலை 16, 2025 03:38

விட்டால் பிரசவம் கூட பார்ப்பார்கள் போல...


Senthoora
ஜூலை 16, 2025 06:52

எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுகூடத்தெரியலயே, பொலிஸாருக்கு அவசர மருத்துவ சிகிச்சை செய்ய, மார்புவலி, விபத்தில் காயம் பட்டால், பெங்களுக்கு பிரசவம் பார்க்க மருத்துவம் செய்ய பயிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கு, அவர்கனின் காரில் அது தேவையான அவசர மருத்துவ முதலுதவி பெட்டி இருக்கு, இந்திய போலீசாரிடம் இருக்கும் மிளகாய் தூள், கஞ்சா இருக்காது, இருக்கிறாங்க. இந்தியாவில் பெண் போலீசார் தாய்ப்பால்கூட கொடுத்து இருக்கிறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை