உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பிரதமர் மீது மிகுந்த மரியாதை; டிரம்ப் உறுதி

இந்திய பிரதமர் மீது மிகுந்த மரியாதை; டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9prebh5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில், டொனால்டு டிரம்ப் கூறியதாவது: சவூதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தைகளில், விரக்தியின் காரணமாக உக்ரைன் பங்கேற்கவில்லை. உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் முன்பே ஈடுபட்டிருக்க வேண்டும். இதை மிக எளிதாக தீர்த்து வைத்திருக்க முடியும்.உக்ரைனில் ஐரோப்பா தனது படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அங்கு பாதுகாப்பு படைகளை பணியில் ஈடுபடுத்துவது நல்லது. நான் அதை எதிர்க்கவே மாட்டேன். முன்னாள் அதிபர் ஜோ பைடன் போரை கையாண்ட விதம் சரியில்லை. ஒரு தீர்வை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மோதலை நீடித்தார். போருக்கு என்னால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எனக்கு அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

மலிவு விலையில் சிகிச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று நாடு முழுவதும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மிகவும் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டது. கருத்தரித்தல் சிகிச்சைகள் அரசினாலோ அல்லது காப்பீட்டு நிறுவனங்களினாலோ வழங்கப்படும். அதேபோல், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் கூடுதலாக 25% வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதிக பணம் இருக்கிறது!

இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்தி வைக்க, எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு உத்தரவிட்டது. இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: அவர்களிடம் அதிக பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை. நாங்கள் ஏன் இந்தியாவிற்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறோம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அவர்கள் அதிகமாக வரி விதிப்பதால் நாங்கள் அங்கு செல்ல முடியாது. இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ganesh
பிப் 19, 2025 13:30

கலைஞர் போல் இதயத்தில் இந்தியாவிற்கு இடம் குடுக்கும் டிரம்ப்க்கு நன்றி..


ரமேஷ்ராகவ்
பிப் 19, 2025 13:22

140 பேரை விலங்கிட்டு அனுப்பி 140 கோடி பேருக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கார்.


Anand
பிப் 19, 2025 12:44

கூட்டுக்களவாணிகளுக்கு வயிற்றை கலக்கும்...


abdulrahim
பிப் 19, 2025 11:51

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அவர்களை ஒருமையில் எழுதும்போதும் அவரை திருடனென எழுதும் போதும் வராத ரோஷம் சங்கிகளுக்கு ....


பேசும் தமிழன்
பிப் 19, 2025 12:51

தான் இருக்கும் நாட்டை பற்றி வெளிநாட்டில் போய் ...


abdulrahim
பிப் 19, 2025 11:48

ஒருவர் கருத்து எழுதினால் அவன் கருத்தோடு தர்க்கம் செய்யுங்கள் மாறாக அவன் சார்ந்த ஒட்டு மொத்த மதத்தின் மீது விழுந்து பிராண்டாதீர்கள் அது மதவெறுப்பு கலந்த கோழைத்தனம் .


Kasimani Baskaran
பிப் 19, 2025 13:38

இதே கருத்தை நீங்கள் திரும்ப படித்து பார்த்து முகம் தெரியாத ஒருவனை சங்கி என்று சொல்வது மட்டும் சரியா என்று சொல்ல முடியுமா? உங்களுக்கு யார் பிராண்டும் அதிகாரம் கொடுத்தது? எதை விதைக்கிறீர்களோ அதுதான் அறுவடை செய்ய முடியும்.


Barakat Ali
பிப் 19, 2025 11:03

ம்ம்ம்ம் .... வயிற்றெரிச்சலில் ராஜீவுக்கு ரீகன் குடை பிடிச்சதை நாங்க பரப்புரை செஞ்சும் ஈடுபடலை .....


Palanisamy T
பிப் 19, 2025 09:58

பிரதமர் மீது மிகுந்த மரியாதையா எந்த இந்திய பிரதமர் மீதும் மரியாதை யிருக்கும். பகைத்தால் பெரிய நட்டம் அமெரிக்காவிற்க்குதான். உண்மையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள எந்த நாடும் முன் வராது. பூகோள அமைப்பில் இந்தியா கடல்வழியாகவும் ஆகாய வழியாகவும் அனைத்துலக பார்வையில் முக்கிய கேந்திர இடத்திலுள்ளது. பகைத்தால் அவர்களுக்கும் நட்டம். அதனால்தான் இந்த அளவு கடந்த மரியாதை


Tirunelveliகாரன்
பிப் 19, 2025 11:23

தெளிவான புரிதல்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:47

இப்படியெல்லாம் நீங்க சொல்லி எங்களுக்கு அங்கங்க எரிச்சலை உண்டாக்குறீங்க ....


abdulrahim
பிப் 19, 2025 09:39

ஏண்டா அதனாலதான் இந்திய மக்களை கைவிலங்கிட்டு அனுப்பினியா ???


Mohan
பிப் 19, 2025 10:03

கள்ளத்தனமா அவுங்க நாட்டுக்குள்ள போன அவுங்களுக்கு என்ன ராஜா உபசாரமா குடுப்பாங்க..அதென்ன சத்ரமா நம்ம நாடு மாதிரி கண்டவனெல்லாம் வந்து மேஞ்சிகிட்டு வெடி வெச்சு பழகிட்டு போறதுக்கு ..


abdulrahim
பிப் 19, 2025 09:38

ஒரு திருடனுக்கு இன்னொரு திருடன் வக்காலத்து.


Bharathanban Vs
பிப் 19, 2025 09:59

தரங்கெட்டதனமான விமர்சனம்..


MUTHU
பிப் 19, 2025 10:06

பேச்செல்லாம் ரோஷக்காரன் போல் இருக்கும். முதலில் வரும் நூறு பேருக்கு அமெரிக்கா குடியுரிமை என்றால் முன்னாடி உள்ளவனை மிதித்து தாண்டி கூட செல்வாய். உனக்கு மட்டுமல்ல இங்குள்ள எல்லோரின் மன நிலையும் அது தான்.


Raman
பிப் 19, 2025 10:32

Are you from Pakistan..looks like


karupanasamy
பிப் 19, 2025 10:45

நீ கடைபிடிக்கும் தரம் கெட்ட மார்க்கம் உண்னை அப்படி சிந்திக்க வைக்கிறது.கொடூர இசுலாம் துறந்து மதசார்பற்ற நல்வழிக்கு வா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை