உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 % வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 % வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் அவர், அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.இதற்கிடையே, வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பின்னர், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.பிரேசில், அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்துவிட்டது. இதனால் கனடா பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளை கனடா எற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூலை 11, 2025 21:07

Donald Trump, the Tax Expert


Ganapathy
ஜூலை 11, 2025 12:53

வட அமெரிக்க எல்லை மாநிலங்கள் விரைவில் சுதந்திரம் ப்ரகனடப்படுத்தி கனடாவுடன் இணையும்.


Rajasekar Jayaraman
ஜூலை 11, 2025 12:35

இவன் அமெரிக்காவை அழிக்காமல் விடமாட்டான்.


Harindra Prasad R
ஜூலை 11, 2025 12:20

அண்ணன் வரி கூவலை பார்த்தா அண்ணனின் ஆயுதங்கள் ஒன்னும் பெருசா விற்பனை ஆகலை போல இருக்கு ..... இந்தியா வின் பிரமோஸ் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதோ


Ramesh Sargam
ஜூலை 11, 2025 12:13

இந்த டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது பொருளாதாரத்தில் வரி எப்படி விதிப்பது என்பதில் பட்டம் பெற்ற பொருளாதார நிபுணரா என்கிற சந்தேகம் எழுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு எதிர்பார்த்தார். அது கிடைக்ககவில்லை. ஆகையால் இப்பொழுது பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்க ஆசைப்படுகிறார்.


sankaranarayanan
ஜூலை 11, 2025 11:33

வரி டிரம்பு என்றே பெயர் வைத்து இவருக்கு தனி பரிசு வழங்கலாம்


Narayanan
ஜூலை 11, 2025 11:09

இனியும் உலக நாடுகள் பொறுத்திருக்க கூடாது. வரி வசூல் மன்னனின் உத்திரவை திரும்பப்பெற செய்ய வேண்டும் . அமெரிக்காவை தனிமை படுத்தவேண்டும் . அதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபடவேண்டும் .


S.V.Srinivasan
ஜூலை 11, 2025 10:36

பெரியண்ணா என்ற பட்டத்தை துறக்க டிரம்ப் அண்ணன் முடிவு பண்ணிட்டார். வரி, வரின்னு ஒரே வரி புலம்பலா இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை