உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு சென்று இருந்தார். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டை, பிரான்சுடன் இணைந்து இந்தியா நடத்தியது. இதில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். அடுத்தாண்டு இந்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hckeysy9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, பிரான்சில் உள்ள மார்ஷலேவுக்கு, பிரான்ஸ் அதிபரின் விமானத்தில், மேக்ரோனுடன், பிரதமர் மோடி பயணம் செய்தார். தன் பயணத்தை முடித்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, விமான நிலையம் வரை சென்று, மேக்ரோன் வழியனுப்பி வைத்தார். அவர் வாஷிங்டன் சென்று அடைந்தார்.அங்கு, அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவாரத்தை நடத்த உள்ளார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து சிறப்பாக செயல்படுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Jay
பிப் 15, 2025 18:13

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இங்கு இருக்கும் படித்தவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பிரதமரின் அருமை தெரியும். அதனால் தான் மோடி செல்லும் இடமெல்லாம் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அம்மா இறந்ததற்கு அரை நாள் மட்டும் சென்று காரியம் முடித்து மீதம் உள்ள அரை நாள் வேலை செய்த ஒரு மனிதரை எப்போது தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்?


ஜனா
பிப் 13, 2025 20:37

அங்கேயும் வேலை வெட்டியில்லாதவங்க வரவேற்க வந்துட்டாங்க


venugopal s
பிப் 13, 2025 16:54

வரவேற்பு கொடுத்த அத்தனை பேரும் கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறிய குஜராத்திகள் மட்டுமே!


Senthoora
பிப் 13, 2025 16:27

நீங்க ஒன்றை புரிந்து கொள்ளுங்க, மற்றைய நாட்டு பிரதமர்கள், எந்த நாட்டுக்கு போனாலும் அதை அந்த நாட்டுமக்கள் பெரிதாக பார்ப்பதில்லை, அதை பற்றி அவர்கள் கவலை படுவதில்லை. போவதும் தெரியாது, வருவதும் தெரியாது, இதெல்லாம் அரசியல் அல்ல, வெளியுறவு சங்கதிகள்.


guna
பிப் 13, 2025 18:21

சரி...நீயும் இதை பெரிது படுத்தாமல் டாஸ்மாக் போய் குப்புற படுத்துக்க செந்தூர...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2025 15:19

எந்த பிரதமருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த அளவுக்கு மரியாதையோ, வரவேற்போ கொடுத்ததில்லை ..... பலருக்கு அங்கே எரியும் விறகை வெச்ச மாதிரி இருக்கும் ......


Kannan
பிப் 13, 2025 08:33

நிறைய செய்திகளில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பிரதமர் ட்ரம்பை சந்திக்க இருப்பதாகவும் அதற்கு பின் டின்னர் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள் நமது நேரம் மாலை 4 மணி என்றால் வாஷிங்டன் நேரம் காலை 5 அதற்கு பின் டின்னரா? என்ன செய்தி போடுகிறார்கள்?


அமெரிக்குமார்
பிப் 13, 2025 08:57

நாஷ்டா.


Senthoora
பிப் 13, 2025 16:29

இந்தியாவுக்கு கொடுத்த உதவியும் நிட்பாட்டியாச்சு, இதுக்குமேல என்ன எதிர்பார்ப்பு, அதானி, கள்ளக்குடியேறிகள் பற்றியா தெரியணும்.


அப்பாவி
பிப் 13, 2025 07:31

ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வம்சாவளி பாலிட்டிக்ஸ்.


vivek
பிப் 13, 2025 07:46

பாவம் உன்னை தான் உன் குடும்பத்தில் ஒதுக்கி வச்சுட்டாங்க


Kalyanaraman
பிப் 13, 2025 07:24

ஜெய்ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை