உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இத்தாலி சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

இத்தாலி சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

பஷானோ: 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எரிசக்தி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆப்ரிக்க விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.ஜி - 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் -- காசா போர் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தன் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று நடக்கும் ஜி - 7 கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இன்று இத்தாலியில் நடக்கும் ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். கடந்த ஆண்டில் இத்தாலி பிரதமர் மெலோனி இருமுறை இந்தியா வந்திருந்தார். அந்த பயணம் இரு தரப்பு நாடுகளின் திட்டங்களை வேகப்படுத்தின. இந்தியா- - இத்தாலியின் உறவை பலப்படுத்துவதிலும், இந்தோ- - -பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.ஜி - 7 மாநாட்டின் கலந்துரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்ரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Velan Iyengaar
ஜூன் 14, 2024 16:16

இத்தாலி அரசு சார்பாக ஒருவரையும் விமான நிலையத்துக்கு அனுப்பி வரவேற்கவில்லை என்பது தான் உண்மை...


Ramarajpd
ஜூன் 14, 2024 15:22

40 வேஸ்ட்.


Jai
ஜூன் 14, 2024 13:14

ஜி 7 மாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு வந்துள்ளது இந்தியாவிற்கு அனுப்ப பெருமை. இந்த மீட்டிங் மோடி பிரதமராக தேர்வு ஆவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. தற்போது யார் பிரதமராக இருந்திருந்தாலும் இதற்கு சென்று இருக்க வேண்டும். G7 மாநாட்டில் தற்போது நடக்கும் இரண்டு போர்களைப்பற்றி விவாதிக்க இருக்கிறார்கள் மற்றும் எப்போதும் போல் காலநிலை மாற்றம் பற்றி பேசிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவிற்கு பாதகமான விஷயங்களுக்கு இந்த மாநாட்டில் இந்தியா குரல் கொடுக்கலாம். MMS பிரதமராக இருந்தபோது இது போன்ற மாநாடுகளுக்கு செல்லும் பொழுது மிக சிரமப்பட்டார். ஒரு முறை இருதய ஆபரேஷன் நடந்தவுடன் MMS இப்படி ஒரு மாநாட்டிற்கு செல்ல வேண்டியதாக இருந்தது. 70 வயதிற்கு மேல் இப்படிப்பட்ட பயணங்கள் சிரமமாக இருக்கும். இருந்தாலும் மோடி அவர்கள் சென்று வருகிறார். சென்ற முறை இவ்வாறு மாநாட்டிற்கு சென்று வந்து இறங்கியவுடன் மோடி உடனடியாக bureaucratic meeting நடத்தினர்.


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 10:50

விடியலும் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்னு சொல்லிகிட்டு கூட்டணி கட்சி வடக்கனுங்க டெல்லியில் நடத்தும் கூட்டத்திற்கு தனி விமானத்தில் போய் போய் வராரு ....ஒரு தம்பிடி பிரயோஜனம் இருந்ததா...? சொல்லுங்க மக்கா...


Narayanan Muthu
ஜூன் 14, 2024 13:30

ஊர்நாட்டானே, நாய்டு கிட்டவும் நிதிஷ் கிட்டவும் மோடியை முட்டிபோட வச்சதுதான் பிரயோஜனம்னு எங்க தமிழ்நாட்டில் பேசிக்கிறாங்க ஊர்நாட்டானே


Barakat Ali
ஜூன் 14, 2024 13:58

அவரது கட்சிக்கோ, இண்டி கூட்டணிக்கோ கூட ஒரு பயன் இல்லை .....


hari
ஜூன் 14, 2024 14:35

super


RAJ
ஜூன் 14, 2024 10:46

கரெக்டாதாண் ID வச்சுஇருக்கு.


பிரேம்ஜி
ஜூன் 14, 2024 10:12

அரைச்ச மாவையே அரைப்பார். மனிதர்கள் மாறமாட்டார்கள்.


பாமரன்
ஜூன் 14, 2024 09:12

எனக்கு ஒரு சந்தேகம் ஜாமி... இந்த ஜி7 கூட்டமைப்பு ஒரு துட்டு அதிகம் வச்சிருக்கும் குரூப்... அவனுவ ஏதோ விழா கூத்து நடத்துறானுவ... இதுவரை இந்த மாதிரி மீட்டிங்ல போய் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்னு சொல்லி ஒரு தம்பிடி பிரயோஜனம் இருந்ததா...? சொல்லுங்க மக்கா...


KavikumarRam
ஜூன் 14, 2024 10:56

இது இண்டி கூட்டணி மீட்டிங்குக்கு போய்ட்டு அவங்க என்ன பேசுறாங்கன்னு புரியாம, ஹிந்தி கத்துக்கிட்டு திரும்ப வாங்கன்னு கேவலப்படுத்தி பல்பு வாங்கிட்டு வர்ற மீட்டிங் இல்ல.


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 08:29

உலகிலேயே அதிகமாக வளர்ந்த மாநிலமான தமிழகத்தின் பிரதிநிதிகளை ஏன் அழைக்கவில்லை என்று உபிஸ் கண்டனம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி