உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் மூண்டாலும் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்; மூடிஸ் நிறுவனம் கணிப்பு

போர் மூண்டாலும் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்; மூடிஸ் நிறுவனம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்; பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.மதிப்பீட்டின் போது, மூடிஸ் நிறுவனமானது பணப்புழக்கம், நிதி விகிதங்கள், புவிசார் அரசியல் காரணிகள் என பல அம்சங்களை மையப்புள்ளியாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது.அதன் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றச்சூழல் குறித்தும், போர் மூண்டாலும் இருநாடுகளின் பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறி உள்ளதாவது; கடந்தாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாக்.கிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகும். பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை.ஆகையால், போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியா மிக பாதுகாப்பாக இருக்கும். அதேநேரத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிக செலவு செய்ய நேரிட்டால் இந்தியாவின் நிதி நிலையில் சற்றேதான் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆனால், போர் பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பின்னடைவை எதிர்கொள்ளும். அந்திய செலாவணி கையிருப்பையும் பாதிக்கும். இவ்வாறு மூடிஸ் நிறுவனம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
மே 06, 2025 15:54

இந்த மூடிஸ் நிறுவனம்தான் 2008 ல அமெரிக்க பொருளாதாரம் சூப்பராப் ப்போயிட்டிருக்குன்னு அறிக்கை குடுத்து உலகப் பொருளாதாரத்தையே கவுத்தவங்க.


palaniraj
மே 06, 2025 09:43

எல்லோரும் பணத்தை மட்டும் தான் யோசிக்கின்றனர் . உயிரை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை


Anand
மே 06, 2025 10:50

இதை அந்த மூர்க்கங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்வி...


thehindu
மே 06, 2025 08:47

தன் தோல்விகளை பித்தலாட்டங்களை மறைக்க உலகில் உள்ளவர்களிடமெல்லாம் தஞ்சமடையும் மதவாத கும்பல்


N Sasikumar Yadhav
மே 06, 2025 10:06

ரொட்டிக்கு பிச்சையெடுத்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கைவிடாத மதவெRY பிடித்த பாகிஸ்தான் உலகநாடுகளில் தஞ்சமடைகிறது மதவெRY பிடித்த பாகிஸ்தான்


Anand
மே 06, 2025 10:51

உன்னோட புத்தியை காட்டவேண்டாம்...


Barakat Ali
மே 06, 2025 08:37

இதைச்சொல்ல மூடிஸ் வேணுமா? ......


Ramaswamy Sundaram
மே 06, 2025 12:29

ஏன் உங்களுக்கு YERIYUTHU


Barakat Ali
மே 06, 2025 13:47

மூடிஸ் பொருளாதாரத்தை மட்டுமே அனலைஸ் செய்யும் நிறுவனம் ..... நம்மிடம் அந்நியச்செலாவணி தேவைக்கும் அதிகமாக இருக்கிறது .... அந்த அடிப்படையில் இதைச்சொல்ல மூடிஸ் வேணுமா என்று கேட்டேன் .... இங்கே டாபிக் போர்ப்பாதிப்பு குறித்து இல்லை .... பொருளாதாரம் குறித்துதான் ....


RAJ
மே 06, 2025 08:30

Dont post enemy/ coward flag here.


மீனவ நண்பன்
மே 06, 2025 08:11

ராணுவ தளவாடங்கள் விற்பனை மூலம் எந்தெந்த நாடுகளின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்று கணக்கெடுப்பாங்க ..


Yes your honor
மே 06, 2025 09:14

கண்டிப்பாக இந்தியாவும் அந்த லிஸ்டில் இடம் பெரும், நாமும் ராணுவ ஏற்றுமதியாளர் தான்.


சமீபத்திய செய்தி