உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் மோதலுக்கு காரணம்: ஷாங்காய் மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மீது புடின் பாய்ச்சல்

உக்ரைன் மோதலுக்கு காரணம்: ஷாங்காய் மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மீது புடின் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தியான்ஜின்: உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில் தெரிவித்தார்.சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் புடின் பேசியதாவது: உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் தூண்டுதலின் பேரில் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய விருந்தில் அவர் கலந்து கொண்டார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்து அழுத்தம் கொடுத்தது ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பாராட்டு

இந்தியா, சீனாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். அவர், போர் நிறுத்த விவகாரத்தில் இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiMurugan Murugan
செப் 02, 2025 00:33

ManiMurugan Murugan மேற்கத்திய நாடுகள் எப்போதும் தாங்கள் தான் உலகத்தை படைத்தவர்கள் போல் நடப்பது வழக்கம் இப்போது அமெரிக்காவும் சேர்ந்துள்ளது அவர்களைப் பொறுத்த வரை ரஷ்யா வளர க் கூடாது அதனால் இந்தியாவையும் பிரச்சனைக்கு உள்ளாக்கு கிறார்கள் காலமாறியப் பின்னும் பகையை வளர்ப்பது தான் நாகரிகம் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் பண்பாடா


N.Purushothaman
செப் 01, 2025 17:40

உலக அரங்கில் ரஷ்யா தனித்து விடப்பட்டதாக தோற்றம் உருவாக்கிய நிலையில் புடின் முன்னாள் உளவாளி என்பதால் மிக மிக சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் ....புடினை சமாதான படுத்தக்கூடிய தலைவராக தற்போதைய அளவில் மோதி மட்டுமே உள்ளார் ...எப்ஸ்டைன் பைல்ஸ் ட்ரம்ப் சம்மந்தப்பட்ட ரகசியம் ஒன்று புடின் கையில் இருப்பதால் தான் ட்ரம்ப் அவரிடம் அடக்கி வாசிப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன ... அதே போல புடினும் ட்ரம்பின் ஈகோவை தொடாமல் அவரை அலங்கார வார்தையால் பாராட்டி மனம் குளிர செய்து டம்மியாக்கி விட்டார்...


Nada raja
செப் 01, 2025 15:31

புடினை நம்ப கூடாது... அவர் உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்..


பேசும் தமிழன்
செப் 01, 2025 20:22

உனக்கு இந்தியாவின் உண்மையான நண்பன் யார் என்று தெரியவில்லை.... இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது..... அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் என்ன செய்தன.... யார் நம் நாட்டை காப்பாற்றியது என்று தெரிந்து கொண்டு பேசவும்.... ரஷ்யா மட்டுமெ நமது உண்மையான நட்பு நாடு !!!.... எப்போதும் நம் பக்கம் நின்று இருக்கிறார்கள்..... நாமும் ரஷ்யா பக்கம்.... அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.


Shivakumar
செப் 02, 2025 06:13

அதுக்கு யார் காரணம் என்று தெரியுமா... அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான் காரணம். உக்ரைன் ஒருகாலத்தில் ரஷ்யாவின் ஒரு பகுதி. போருக்கு முன்புவரை ரஷியாதான் அணைத்து உதவிகளும் உக்ரைனுக்கு செய்து வந்தது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனை உசுப்பேத்தி நேட்டோவிடம் சேரச்சொன்னத்தின் விளைவு இன்று உக்ரைன் அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் உக்ரைனின் கோமாளி ஜெலின்ஸ்கிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை