உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார். இந்த சோதனை தேவையில்லாத ஒன்று அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் 'போஸிடான் சூப்பர் டார்பிடோ' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது. பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 30, 2025 09:22

"கெடுவான், கேடு நினைப்பான்" என்பது ஒரு பழமொழி ஆகும், இதன் பொருள் அழிவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் எப்போதும் மற்றவர்களுக்கும் அழிவையே சிந்திப்பார் என்பதாகும். அந்த கெட்ட எண்ணமே அவருக்குப் பெரும் அழிவைக் கொண்டுவந்து சேர்க்கும். ரஷ்யா அதிபருக்கு இந்த பழமொழியை எடுத்துக்கூறி அவர் செய்யும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


Shankar
அக் 30, 2025 08:56

பெயருக்கேற்ற கருத்து


அணுகுண்டன்
அக் 30, 2025 08:36

சும்மா வெற்றி வெற்றின்னுட்டு. எவன் தலையிலாவது போட்டுப் பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை