உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்

பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸல்ஸ் : உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புடின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் மூன்றரை ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்தப் போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புடின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; கீவில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நான் பேசினேன். புடின் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.நம்பகமான மற்றும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மூலம் உக்ரைனுக்கு நீதியான மற்றும் நீடித்த அமைதியை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஐரோப்பா அதன் முழு பங்கை வழங்கும். உதாரணமாக, எங்கள் ஷேப் (SAFE) என்ற பாதுகாப்புக் கருவி, உக்ரைன் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ManiMurugan Murugan
ஆக 29, 2025 23:35

அமெரிக்க அதிபரின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர அவர்கள் நாட்டில் உற்பத்தியை பெறுக்காது அடுத்த நாடுகளிடமிருந்து பிடுங்குவது வளர்ந்த நாடான அமெரிக்காவிற்கு அழகா நாகரிக பண்பாடு கலாச்சாரத்தைப் பேசுபவர்கள் அதை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்


Ramaraj P
ஆக 29, 2025 21:12

எதுக்குமா பேச்சுவார்த்தைக்கு வரனும். நீங்கள் தான் தையிரிம் ஆனா ஆளாச்சே போரில் வெற்றி பெற வேண்டியது தானே.


தஞ்சை மன்னர்
ஆக 29, 2025 16:09

முதலில் டிரம்ப் கூறியபடி உக்ரைன் நேட்டோ யில் சேரக்கூட என்ற கருத்து என்ன ஆச்சி அதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும் பிறகு ஒரு நாட்டின் அதிபர் வரணுமா வரக்கூடாத என்பதை அந்த நாடு முடிவு எடுக்கும் இப்படி ஐரோப்ப நாட்டில் ஒன்றின் அதிபரை வேறு ஒரு நாடு சொன்னால் ஒத்துக்கொள்ளும் இந்த ஒன்றியம் என்ன அடாவடி தானம் ஆசியாவின் மீது இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் அனைத்து பொருள்களையும் அனைத்து நாடுகளும் உடனே நிறுத்தினால் அடங்கி விடும் இந்த வெள்ளை தோல்களின் ஆட்டம் இதை நிச்சயம் செய்யவேண்டும்


தஞ்சை மன்னர்
ஆக 29, 2025 16:05

முதலில் டிரம்ப் கூறியபடி உக்ரைன் நேட்டோ யில் சேரக்கூட என்ற கருத்து என்ன ஆச்சி அதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும் பிறகு ஒரு நாட்டின் அதிபர் வரணுமா வரக்கூடாத என்பதை அந்த நாடு முடிவு எடுக்கும் இப்படி ஐரோப்ப நாட்டில் ஒன்றின் அதிபரை வேறு ஒரு நாடு சொன்னால் ஒத்துக்கொள்ளும் இந்த ஒன்றியம் என்ன அடாவடி தானம் ஆசியாவின் மீது இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் அனைத்து பொருள்களையும் அனைத்து நாடுகளும் உடனே நிறுத்தினால் அடங்கி விடும் இந்த வெள்ளை தோல்களின் ஆட்டம்


தமிழன்
ஆக 29, 2025 15:43

இந்தியாயாவையும் ரஷ்யவையும் பிரிக்கவா


Madras Madra
ஆக 29, 2025 13:46

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது நேட்டோ நாடுகள் இப்ப புலம்பி கெஞ்சி என்ன பிரோயோஜனம்


sankaranarayanan
ஆக 29, 2025 12:54

மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புடினையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கியையும் ஒரு நடு நிலைமை நாட்டிற்கு அழைத்து சமரசம் பேசி அமைதிக்கு வழி வகுக்கலாம் மோடியால் முடியும் மோடி சொன்னால் இருவரும் கேட்பார்கள் உலகில் அமைதி நிலவ மோடியின் பங்கு முக்கியம் வேண்டும் காலம் தாழ்த்தாமல் இதை மோடி அவர்கள் செய்ய வேண்டும் வேறு யாராலுமே முடியாத காரியத்தை மோடியாதான் செய்ய முடியும் அமைதி தூதர் என்ற பெயர் மோடிக்கே உரித்தானது


M Ramachandran
ஆக 29, 2025 12:40

தன்னைய்ய தானே கடித்து கொண்டு தம் மக்களையெ அவதிக்குள்ளாக்கப்போனாகிறான்.


Artist
ஆக 29, 2025 12:12

கட்டப்பஞ்சாயத்து


ஆரூர் ரங்
ஆக 29, 2025 12:06

NATO வில் சேர்க்கை என்பதெல்லாம் அற்பக் காரணம். புடினுக்கு பேராசை. மண்ணாசை. சுற்றியுள்ள நாடுகளைப் பிடித்து சுரண்டல் சாம்ராஜ்யமாக ஆகி பெரியண்ணனை மிஞ்சும் ஆசை. கிரிமியாவில் துவங்கியது. உக்ரேனில் தொடர்கிறது. அவ்வளவுதான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 29, 2025 17:01

உங்கள் கருத்து தவறாக தோன்றுகிறது. ஜார்ஜியா, உக்ரைன் இரண்டு நாடுகளிலும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்ததுபோல. ரஷ்ய பூர்வீக மக்கள் வெகுண்டெழுந்து ரஷ்யாவின் உதவியை நாடினர். இப்படி ஜார்ஜியா மற்றும் உக்ரைன் நாடுகளில் மொழிப்பிரசனையை தூண்டியது அமெரிக்காவும், ஐரோப்பாவும். நாட்டோ உறுப்பினர் என்பது ஜார்ஜியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட குச்சி மிட்டாய். இப்படி சும்மா இருந்த ரஷ்யாவை வம்புக்கு இழுத்து அடி வாங்கியபின் அழுவது சரியல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை