உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா சென்ற ராகுல்: பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்

அமெரிக்கா சென்ற ராகுல்: பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், 3 நாள் பயணமாக ( செப்.,08-10) அமெரிக்காவின் டெக்சாஸின் டல்லாஸ் நகர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, இந்திய வம்சாவளியினர் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல், இன்று( செப்.,08) டல்லாசில் உள்ள டெக்சாஸ் பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 9 மற்றும் 10ம் தேதிகளில் வாஷிங்டன் செல்லும் ராகுல், அங்கு நடக்கும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Raghav
செப் 09, 2024 08:06

Always he told only anti Indian messages. Useless visit


கண்ணன்
செப் 09, 2024 06:41

படத்தைப் பார்த்தால் எவரும் மாணவர் மாதிரி தெரியவில்லையே! வெறும் போட்டோ ஷூட்தானா!


Kasimani Baskaran
செப் 09, 2024 05:42

கூட்டமாக இவர்கள் செல்லுவதைப்பார்த்தால் ஏதோ பெரிய திட்டம் இருப்பது போல தெரிகிறது.


Nava
செப் 08, 2024 23:46

நாறிப்போன கருத்துக்களை உதிர்க்காமல் இருக்க வாய்ப்பில்லை


xyzabc
செப் 08, 2024 22:50

விடியல் சார் உடன் சைக்ளிங் இல் சுற்றலாமே ?


nagendhiran
செப் 08, 2024 22:48

அவர் என்ன பேசுறார்னு அவருக்கே தெரியாது? அல்வா கிண்டுவதிலும் ஜாதி பார்ப்பார்? அழகி போட்டியிலும் ஜாதி பார்ப்பார்? பப்புனு எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டார்?


பேசும் தமிழன்
செப் 08, 2024 22:36

ஊழல் பேர் வழிகள் எல்லாம்... ஒரே நேரத்தில் அமெரிக்காவில் கூடுவது.... சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பேசும் தமிழன்
செப் 08, 2024 22:35

10 பிள்ளை பெற்றவளுக்கு.... 1 பிள்ளை பெற்றவள் பேறுகாலம் பார்த்தாலாம் என்பது போல் இருக்கிறது இது.... பப்பு க்கு LKG படிக்கும் மாணவர்கள் அளவுக்கு தான் அறிவு இருக்கிறது.... இவர் போய் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்ற போகிறாராம் !!!


ராமகிருஷ்ணன்
செப் 08, 2024 21:39

என்னத்த ஏழரை இழுத்து பேசுவானோ. நாச வேலைகளுக்கு திட்டம் போடுவானோ, பணத்தை பதுக்குவானோ.


R.MURALIKRISHNAN
செப் 08, 2024 21:32

இந்தியாவை பற்றி தவறாக உளறாமல் இருந்தால் சரி


Srinivasan K
செப் 09, 2024 08:01

don't expect good from him.


சமீபத்திய செய்தி