ஈரான் மீதான பொருளாதார தடையை நிரந்தரமாக நீக்கும் தீர்மானம் தோல்வி
நியூயார்க்:ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நிரந்தரமாக நீக்குவதற்கான வரைவு தீர்மானம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வியடைந்தது. இதனால், அந்நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது . இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சு நடந்தன. ஆனால், இதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பிரி ட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிப்பதற்கான 'ஸ்னாப்பேக்' திட்ட செயல்முறைகளை துவக்கின. இந்த செயல்முறையின் படி, பொருளாதார தடைகள் 30 நாட்களுக்குள் மீண்டும் அமலுக்கு வரும். இதை அடுத்து, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடைகளை நீக்குவதா என்பது குறித்த வரைவு தீர்மானம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் ஓட்டெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது . ஓட்டெடுப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக ஓட்டளித்தன. இரண்டு நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இ தையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது. பொருளாதார தடைகள் மீண்டும் வருகிற 28ம் தேதிக்குள் அமலுக்கு வர உள்ளது. இரு ப்பினும், இதை தவிர்ப்பதற்கான பேச்சு நடத்த இன்னமும் எட்டு நாட்கள் உள்ளன. மேலும், ஐ.நா., பொதுசபைக் கூட்டம் நியூயார்க் நகரில், நாளை முத ல் நடைபெற உள்ளது. இதையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் அங்கு ஒன்று கூடியிருப்பதால், பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து ஈரான் பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.