உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ

ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ''ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்'' என நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.இது குறித்து மார்க் ரூட் பேசியதாவது: மோதல் நம் வாசலில் உள்ளது. ரஷ்யா ஐரோப்பாவில் மீண்டும் போரை கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். நமது கூட்டாளிகளில் அதிகமானோர் அமைதியாக மெத்தனமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன். இதில் உள்ள அவசரத்தை உணரவில்லை. பலரும் காலம் நம் பக்கம் இருப்பதாக நம்புகின்றனர். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும். கடந்த தலைமுறையினர் போல, போரை தடுக்க பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்யா ஏற்கனவே நமது சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது தாத்தா, பாட்டி அல்லது கொள்ளு தாத்தா, பாட்டி அனுபவித்த போரின் அளவிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது ஆயுதப்படைகள் நம்மை பாதுகாக்க தேவையான அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரூட் பேசினார். நேட்டோ எனப்படும் ராணுவ கூட்டமைப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 32 நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகள் உள்ளன. மொத்தமுள்ள 32 நாடுகளில் 30 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. ஏற்கனவே உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த சூழலில், நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAJ
டிச 12, 2025 11:04

ஏன்யா உனக்கு வேற வேலை இல்லையா.. ரஷ்யா நம்புள அடிச்சிடும் அடிச்சிடும்னு பினாத்தலாய் விட்டுபுட்டு... உக்ரனை குழிதோண்டி புதைக்காம விட்ட சரி... ஒரு காமெடி பீசு கைல கிடைச்ச உடனே அவரை உண்டு இல்லைனு ஆக்கி.. சாப்பிடறீங்க....அந்த பயபுள்ள அங்கேயும் இங்கியேயம் அலையுது.. .. நீ இப்போ நேட்டோவை உஷார் பண்ற மாதிரி தெரில... ரஷ்யாவுக்கு ரூட்டு போட்டு குடுக்கறமாதிரிதான் தெரியுது...


Anand
டிச 12, 2025 10:54

சண்டையை முடிவுக்கு கொண்டுவராமலிருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்துக்கொண்டிருக்கிறான்.


ஜெகதீசன்
டிச 12, 2025 10:42

தன் பதவிக்காக இப்படி பேசுகிறார். ரஷ்யா - உக்ரைன் எல்லையில் இருந்து நேட்டோ படைகளை வாபஸ் பெற்று போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அழுத்தம் தருவதால் ஆதாரமற்ற போர் பீதியை கிளப்புகிறார்.


Ramaraj P
டிச 12, 2025 09:32

போர் சூழல் ஏற்பட்டால் நாட்டுக்காக போராடுவீர்களா என கேட்டதற்கு நேட்டோ நாட்டு மக்கள் 79% பேர் முடியாது என கூறி விட்டனர். உண்டு கொழுத்து சோம்பேறிகளாக மாறிவிட்டனர் கடந்த 60-70 வருடங்களில் ஐரோப்பிய ஒன்றியம்.


djivagane
டிச 12, 2025 13:13

நேட்டோ மக்கள் அவர்கெல் நாட்டுக்கு போராடுவதற்கு போவர்கெல் உக்ரைனுக்கு போகமாடர்கெல் அதேநாள் அவர்கேள சோபெரியாகி விட்டர்கெல் என்று அர்த்தம் இலேய்


chandran
டிச 12, 2025 09:21

நேட்டோவை எதிர்த்து ரஷ்யாவால் ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்க முடியுமா? தேவை இல்லாம பீதியை கிளப்பி விட்டு கொண்டே இருக்கிறார்கள் இந்த நேட்டோ தலைவர்கள். இது ஒரு வகையான தந்திரம்.


தியாகு
டிச 12, 2025 09:17

நேட்டோ அமைப்புக்கு விவரம் பத்தலை, இதுவே நம்ம கட்டுமரம் நேட்டோ அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் கட்சி தொண்டர்கள் ஒரு ஆயிரம் பேரை டிக்கெட் இல்லாமல் ரஸ்யாவுக்கு அனுப்பி, ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மொத்த ரஸ்யாவையும் ஆட்டையை போட்டு கத்தியின்றி ரத்தமின்றி ரஸ்யாவையே நேட்டோவுடன் சேர்த்திருப்பார்.


chandran
டிச 12, 2025 11:11

விஷயம் தெரியாம பேசாதீங்க. ரஷ்யா நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது பல ஆண்டுகளுக்கு முன்பே. ஆனால் நேட்டோ மறுத்து விட்டது.. நினைத்தாலும் நடக்காது


duruvasar
டிச 12, 2025 09:10

பிஜேபிக்கு பயந்தவனெல்லாம் என் மேலே படுதுங்க என்ற ஸ்டாலினின் வார்த்தையை அப்படியே காப்பியடிச்சிருக்காரு. அஸ்தியில் ஜுரம் கண்கூடாக தெரிகிறது.


Barakat Ali
டிச 12, 2025 08:51

ரஷ்யாவே போரை நிறுத்த முன்வந்தாலும் இவனுக உக்ரைனை நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க .......


chandran
டிச 12, 2025 09:29

ரஷ்யா போர் தொடுத்தது அதனுடைய சொந்த நலத்திற்காக.. அது ஏற்புடையது இல்லை. ஆனால் உக்ரைனை உசுப்பி விட்டு உசுப்பி விட்டு, பணம் கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து, இந்த அளவிற்கு மனித, பொருள் சேதம் ஏற்படுத்தியது இந்த நேட்டோ நாடுகள் தான். பொருள் சேதத்தை விடுங்கள். உக்ரைன் நாடு வீரர்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இந்த போரில். காசு பணம் அவர்கள் கொடுப்பார்கள். மனித உயிர்களை நேட்டோ திருப்பி கொடுக்குமா? Zelensky சமயோஜிதமாக யோசித்து இந்த போரை என்ன விலை கொடுத்ததும் நிறுத்த வேண்டும். ஏன் என்றால் மனித உயிர் இழப்பு ukraine கு தான். நேட்டோ நாடுகளுக்கு இல்லை. அவர் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை