உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு வரி விதித்ததால் பேச்சுக்கு முன்வந்தது ரஷ்யா

இந்தியாவுக்கு வரி விதித்ததால் பேச்சுக்கு முன்வந்தது ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு வரி விதித்ததால், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்தது' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தை மதிப்பை காட்டிலும் விலை குறைவாக இருப்பதால், இந்தியா அந்நாட்டிடம் இருந்து மாதம் தோறும் கோடிக்கணக்கான பேரல்கள் இறக்குமதி செய்கிறது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த பணத் தை வைத்து ரஷ்யா உக்ரைனுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பின் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். பின் இதை 50 சதவீதமாக மேலும் அதிகரித்தார். இது, வரும் 27 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அலாஸ்காவில் நேற்று சந்தித்து பேசினர். இந்நிலையில் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக அவர்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதல் வாடிக்கையாளரான சீனாவையும் ரஷ்யா இழக்க உள்ளது. இந்த சம்பவங்களுக்கு பின் ரஷ்ய அதிகாரிகள் என் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, பேச விரும்புவதாகக் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா மறுப்பு

வரி விதித்ததன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக டிரம்ப் கூறியதை நம் அதிகாரிகள் மறுத்துள்னர். மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான 'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ்.ஷானே கூறுகையில், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவில்லை. வழக்கம் போல் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S.V.Srinivasan
ஆக 17, 2025 15:53

ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா என்னை வாங்குவதை நிறுத்திவிட்டோம் என்று இந்தியா ஒருபோதும் ட்ரும்பிடம் கூறியதாக செய்திகள் இல்லையே. டிரம்ப் அவரா சொல்லிக்கிறாரு. என்னவோ போடா மாதவா.


Vivekanandan
ஆக 17, 2025 14:32

டிரம்ப் உலக மகா ஜோக்கர்


Vivekanandan
ஆக 17, 2025 14:28

டிரம்ப் உலக மகா ஜோக்கர்


Shivakumar
ஆக 17, 2025 03:28

நீதானப்ப இண்டியன் எக்கனாமி டெட் எக்கனாமி என்று சொன்ன... டெட் எக்கனாமியா இருந்த ரஷியா எப்படி பேச்சு வார்த்தைக்கு முன்வரும். உன் பேச்சை நம்பி ராகுல் காந்தி வேற வாயை விட்டு மாட்டிக்கொண்டார். உனக்கு இதே வேலையா போச்சு.


Madras Madra
ஆக 16, 2025 10:56

டொனால்ட் டிரம்ப் திராவிட தலைவர்களையே மிஞ்சி விடுவார் போல


L.R.saravanakumar
ஆக 16, 2025 09:57

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் செயல்பாடுகள் மனநிலை பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்தியா ஒருபோதும் யாருக்கும் அடிபணியாது. உலகின் குருவாக பாரதம் மாறும் விரைவில் மோடி ஜி தலைமையில் நடக்கும்


SP
ஆக 16, 2025 09:30

டிரம்பர் பொய் சொல்வதில் நாஜிக்களின் கோயபல்ஸை மிஞ்சி விட்டார். அமெரிக்க அதிபர் இந்த அளவு தரம் கெட்டு செல்வார் என்று நினைக்கவில்லை.


அப்பாவி
ஆக 16, 2025 09:22

வந்து பேசிட்டு பெப்பே சொல்லிட்டு போயிட்டு.


ramani
ஆக 16, 2025 07:04

அமெரிக்க ஜனாதிபதி வாய்க்கொழுப்பு


உண்மை கசக்கும்
ஆக 16, 2025 06:47

டிரம்ப் அப்பாவுக்கு அப்பா ..பொய் சொல்வதில். புரிகிறதா..


ராஜ்
ஆக 16, 2025 08:42

ஒருத்தரு தான் முட்டாளன்னு தெரியாம பேசி கொண்டு இருக்கிறார் இன்னொருத்தர் தான் ஒரு மகா முட்டாளன்னு தெரிந்தும் பேசி கொண்டு இருக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை